பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 வைத்த இடத்திலே கோயிலைக் கட்டியிருக்கின்றனர். இந்தக் கோயில் வாயிலில் ஒரு மணிவிளக்கு தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நந்தா விளக்காக நிர்வாகிகள் காத்து வருகின்றனர். இந்த ஜங்கிலி மகராஜ் சந்நிதியில் இந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்தே வழிபாடு செய் கின்றனர். பூனா நகரத்தில் மிக சிறப்பாகக் கூறப் படுவது சனிவார்வாடா என்னும் பழைய அரண்மனை ஒன்று. சத்ரபதி சிவாஜியின் பரம்பரைக்குப் பின்னால் மகாராஷ் டிரா நாட்டை பீஷ்வாக்கள் உன்னத நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றனர். அப்போது இந்த நகரமே அவர்களது தலைநகராக இருந்திருக்கிறது. பீஷ்வாக்களில் பிரசித்தி பெற்றவரான முதலாவது பாஜிராவ் இந்த அரண்மனை யைக் கட்டியிருக்கிறார். இந்த அரண்மனையின் பல பகுதிகள் இடிந்து விட்டன. எஞ்சிய இடத்தில் ஒரு பொருட்காட்சி சாலை வைத்து அதில் மகாராஷ்டிர மன்னர்களது ஆயுதங்கள் பீரங்கிகள் முதலியவற்றை சேகரித்து வைத்திருக்கின்றனர். இந்நகரின் மத்தியிலே குஜராத்தி துணி வியாபாரிகள் கட்டிய லக்ஷ்மி நாராயணன் கோயில் ஒன்றும் இருக்கிறது. இதற்கு செல்ல ஒரு குறுகிய சந்து வழியாகப் போக வேண்டும். போனால் அங்கு ஒரு பெரிய கோயில் இருக்கும். முழுவதும் கல்லாலேயே கட்டியிருக்கிறார்கள். ಎ.16:ಹಾಡುಹಣ್ಣು அள்ளி இறைத்திருக்கிறார்கள். இங்குள்ள வைஷ்ணவர்கள் ராமானுஜ சித்தாந்த சபை என்று ஒன்னற அழைத்து அதில் திவ்யப் பிரபந்தப் பாடல்களை எல்லாம். பாடுகிறார்கள். ஏதோ நாமதேவர், துக்காராம் முதலியவர்களது பாடல்கள்தாம் அங்கு பிரசித்தம் என்பதில்லை. ஆயிரம் மைலுக்கு அப்பாலும் நமது ஆழ் ஆாகளது பாசுரங்கள் பாடப்படுகின்றன, என்று அறி. prು. ந ம து உள்ளத்திற்கு எவ்வளவோ மகிழ்ச்சி. இன்னும் இந்த நகரைச் சுற்றி சுற்றி வந்தால் கணபதி