பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 உத்தம் புதிதாக மின்விளக்கு வசதிகளுடனும் கண்கவர் வனப்புடனும் இருக்கிறது காஞ்சியிலிருந்து அனந்த ஆச் சாரியார் என்று ஒரு பெரிய பீதாம்பரதாரி இங்கு வந்திருக் கிறார். அவர்சுதசர்ண சக்கர உபாசகராக இருந்திருக்கிறார், அவரிடம் பாலாஜி பஸந்த் என்ற ஒரு பெரிய சேட் ஈடு பட்டிருக்கிறார். அவர் விரும்பிய வண்ணமே சேட் இந்தக் கோயிலைக் கட்டியிருக்கிறார். கோயில் விமானம் பிரண வாகாரமாக அமைந்திருக்கிறது.ஆறுகால பூசைநடக்கிறது. ஐப்பசியில் பிரம்மோற்சவமும், பங்குனி உத்திரம், வைகுண்டஏகாதசி, இராப்பத்து, பகல்பத்து, ஆடி மாதம் ஜூலா என்னும் ஊஞ்சல் உத்சவம் எல்லாம் ஒழுங்காக நடக்கிறது. மார்வாரி மக்கள் ஆணும் பெண்ணும் பாலாஜி பக்தர்களாக கோயிலுக்கு தினம் வந்து போகின்றனர். மாதுங்கா தமிழர்கள், கோயில் கொஞ்சம் தொலைவில் இருப்பதால் அடிக்கடி வருவதில்லையாம். என க் கு என்னவோ வேங்கடேசனை இந்த மராத்திய நாட்டில் கண்டபோது எவ்வளவோ மகிழ்ச்சி. ஆகவேதான் பம்பாய் செல்லும் தமிழர்கள் எல்லாம் இந்த வேங்கட வாணனுக்கு வணக்கம் செலுத்த மறந்துவிடக்கூடாது என் பதற்கே இவ்வளவு சொல்லியிருக்கிறேன். இப்படி ஊரை எல்லாம் சுற்றிவிட்டு தமிழர்கள் வாழும் பகுதியாகிய மாதுங்காவிற்கு வந்தால் அங்கு ஒரு பஜனை சமாஜம், அதை ஒட்டி ஒரு சிவன் கோயில் ஆஸ்திக சமாஜம், அதனை ஒட்டி ராமர் கோயில், விநாயகர் கோயில் எல்லாம் இருக்கிறது. சுப்பிரமண்ய சமாஜத்தார், சண்முகனுக்கு ஒரு கோயில் கட்டிக் கொண்டிருக் கிறார்கள். தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழ்க் கடவுளை மறக்கமாட்டார்கள்தானே! இன்னும் பம்பாயில் எத்தனை எத்தனையோ கோயில்கள். இங்கிலிஷ் சர்ச்சின் பக்கம் ஒரு சமணர் கோயிலும், வொர்லி பக்கம் ஒரு புத்தர் கோயிலும் உருவாகியிருக்கிறது. சமய