பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 பட்டிருக்கிறது. என்றாலும், அது நம் நாட்டுக் கருங் கல்லைப்போல உறுதியானதல்ல. இதனை கருஞ்சலவைக் கல் என்று என்னும்படி பளபளப்பு இருக்கிறது. கோயிலில் விமானத்தின் பேரில் தங்கக் கலசம் ஒன்றிருக்கிறது, அதற்கு மேல் திரிசூலமும் இருக்கிறது. கோயிலை, மாடக்கோயிலைப்போல கொஞ்சம் உயரமான இடத் திலேயே கட்டியிருக்கிறார்கள். ஆதலால் படிகள் ஏறித் தான் கோயிலுள் செல்லவேண்டும். அப்படி படிகள் ஏறும்போதே கெளபீனதாரியாய் நிற்கும் ஒரு விநாயகர் வடிவைக் காண்போம். அதைப் போன்ற வடிவத்தை நான் வேறு இடங்களில் காணவில்லை. பிள்ளையார் பிள்ளைப் பிராயம் கடந்து வளர்கிறவர் என்று காட்டவே அவருக்கு கெனமீனம் தரித்து நிறுத்தியிருக்கிறார் போலும், சிற்பி. இல்லை தம்பி முருகன்தான் கோவ னாண்டியாக நிற்கிறார் என்றில்லை என்னும்படி விநாயகரே கோவனாண்டியாக நிற்கின்றார். கோயில் முன் மண்டபம் சபா மண்டபம் கருவறை என்று மூன்று பகுதியாக இருக்கிறது. முன்மண்டபத்தில் உள்ள தளவரிசையெல்லாம் ப ல சிவலிங்க வடிவங்கள் முன் மண்ட்பத்தைக் கடந்து சபா மண்டபத்திற்கு வந்தால் அங்கு நந்தியிருக்கும். அதன் மேல்கோடியில் உள்ள அந்த மண்டபம் வந்தால் கருவறை வாயில் வந்து சேருவோம். கருவறை ஆறு அடி பள்ளத்தில் இருக்கிறது. அது மிகவும் விசாலமாகவே இருக்கும். அதன் நடுவில்தான் லிங்க வடிவில் இறைவன் இருக்கிறார். அவர் இந்திய நாட்டில் உள்ள பன்னிரண்டு சோதிர் லிங்கங்களில் ஒன்று என்பர். கருவறையில் உள்ள படிகளில் இறங்கியே இறைவனைத் தரிசிக்க வேண்டும். ஆனால் பெண்களை கருவறைக்குள் அனுமதிப்பதில்லை. அவர்கள் கருவறை வாயிலிருந்தே தான் வணங்க வேண்டும். இந்த லிங்கவடிவில் இருக்கும் இறைவன் உயரமான ஆவுடையார் கிடையாது. அதன் தலையில் மூன்று சிறு ரோஜாமொட்டுக்கள் போன்ற உரு