பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. நாசிக் பஞ்சவடி ராமர் நாலிக் பஞ்சவடி காளே ராமர் கோயில் சில வருஷங்களுக்கு முன் ஒரு கூட்டம். அக்கூட்டத்தில் ஒரு கம்பராமாயணப் பிரசங்கம். பிரசங்கி ராமாயணத்தில் சொல்லப்படுகின்ற தலங்களை எல்லாம் விவரித்தார். கவிச் சக்கரவர்த்தி கம்பன் அத்தனை இடங்களுக்கும் சென்று நேரில்கண்டு அதன் பின்னேதான் விஸ்தாரமாக அவற்றை உரைத் திருக்கிறார் என்பது அவரது சித்தாந்தம். அந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்தவன் நான் . நான் சொன்