பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 னேன், கம்பனுக்கும் ஜாக்ரபிக்கும் ரொம்பத்து ரம். அவன் கங்கைக் கரைக்கும் போனதில்லை, கோதாவரியையும் கண்டதில்லை. அயோத்தியையோ மிதிலையையோ தண்ட காரண்யத்தையோ பஞ்சவடியையோ பார்த்ததில்லை. காவிரிக்கரையிலே பிறந்து வளர்ந்த அவன் கங்கையை "தெய்வப் பொன்னியே பொருவும் கங்கை என்றுதான் கூறுவான். சான்றோர் கவி எனக் கிடந்தது கோதாவரி என்பதுதான் அவனது கோதாவரி வர்ணனை, பொதிகையி: லிருந்து அகத்தியர் ராமனிடம் பஞ்சவடியைக் குறிக்கும் போது, குற்றாலமலையையும் அங்குள்ள மரங்கள் அடர்ந்த பொழில்களையும் மனதில் வைத்துக்கொண்டேதான் பாடி இருக்கின்றான் என்றேன். நமக்குதான் தெரியுமே அவரது பஞ்சவடி வருணனை. ஓங்கு மரன் ஓங்கி மலை ஓங்கி, கழை ஓங்கி பூங்குலை குலாவு குளிர் சோலை புடைவிம்ம துரங்குதிரை ஆறுதவழ் சூழல்தோர் குன்றின் பாங்கர் உளதால் உறையும் பஞ்சவடி மஞ்ச என்பதுதானே அவரது சித்திரம். இப்படியே சான்றோர் கவிபோலத் தெளிந்ததாகவும், நிர்மலமானதாகவும் இருக் கும், கோதாவரி என்று எண்ணிக்கொண்டே நாம் கோதாவரிக் கரையை அணுகுகின்றோம். ஆனால் அந்த கோதாவரியில் கலங்கிய தண்ணிரே ஓடிக்கொண்டிருக் கின்றது. பல குண்டங்களில் தேங்கி நி ன் று ஒட்டமே தடைப்பட்டு வேறே கிடக்கிறது. இன்னும் பஞ்சவடியில் ஓங்கு மரங்கள் இருந்தாலும் பூங்குலை குலாவு குளிர் சோலைகளைக் காணோம். துரங்குதிரை ஆறு தவழ்வதைக் காணோம். குன்றில் சூழல்கள் நிறைந்த இடங்களையும்