பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 காணோம். கம்பனது வருணனைக்கும் நாசிக்கில் ஒடிக் கொண்டிருக்கும் கோதாவரிக்கும் எவ்வளவோ வேற்றுமை. அகத்தியர் கூறும் பஞ்சவடிக்கும், நாசிக்கை அடுத்து கோதாவரிக் கரையில் இருக்கும் பஞ்சவடிக்கும் ஒற் துமையே இல்லை எனலாம். என்றாலும் நமது தலயாத் திரையில் நாசிக் பஞ்சவடி சென்று அ ங் கு இன்றுள்ள குண்டங்களையும், கோயில்களையும் குடைவரைகளையும் பார்க்க வேண்டாமா? அதற்காகவே செல்கின்றோம் நாசிக் பட்டணத்திற்கு நாம் இன்று. நாசிக் பம்பாயிலிருந்து நூற்றுப்பதினைந்து மைல் தூரத்தில் இருக்கிறது. ரயிலில் சென்றால் நாசிக்ரோட் என்ற ஸ்டேஷனில் இறங்கி ஐந்து மைல் நடந்தால்தான் நாசிக் நகரம் சென்று சேரலாம். நாசிக் நகரத்தை ஒட்டி கோதாவரி நதி ஒடிக்கொண்டிருக்கிறது. எதிர்த்த கரை யில் உள்ள இடமே பஞ்சவடி அதனால் நாசிக் பஞ்சவடி என்று இரண்டையும் சேர்த்தே சொல்வார்கள். பாடல் பாடுபவர்கூட இரண்டையும் இனைத்தே பாடுவதையும் கேட்டிருக்கின்றோம். செந்துவர் வாய்க் கருங்கண்ணினை வெண்ணகைத்தேன் மொழியார் வந்து வலம் செய்து மாநாடம் ஆட மலிந்த செல்வக் கந்தமலி பொழில் சூழ் பஞ்ச வடி நாசிக் அதனை என்றும் சிந்தை செய்வாரைப் பிரியா திருக்கும் திருமங்கையே, என்ற பாடலில் பஞ்சவடியும் நாசிக்கும் சேர்த்தே பேசப்படுகிறது. பஞ்சவடி என்றால் ஐந்து மரங்கள் உள்ள இடம் என்று தெரிகிறது. நாசிக் என்றால் அதன் பொருள் என்ன என்று கேட்கத் தோன்றும். ராமாயணக் கதை நமக் குத் தெரியும், தாயுரை கொண்டு தாதையின் வாய்