பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 கொள்ளலாம் அல்லவா. இக் கோதாவரி நதி கெளரியின் திருமணக்காலத்தில் பிரமதேவரது கமண்டலத்திலிருந்து வழிந்திருக்கிறாள். அதன்பின் மகாபலிச் சக்கரவர்த்தியின் யாக சாலையில் தோன்றி வாமனரது பாத கமலங்களைக் கழுவிப்பவித்திரம் அடைந்திருக்கிறாள். கோதாவரி, கங்கையுடன் சிவபெருமானது சடாமகுடத்திலேயே தங்கி யிருக்கும் பெருமையும் பெற்றிருக்கிறாள். பகீரதன் தவத் திற்கு இறங்கி கங்கையை வழியவிட்ட சிவனே கெளதமர் விரும்பியபடி கோதாவரியை பிரம்மகிரியிலிருந்து பிரவகிக்கச் செய்திருக்கிறார். அதனாலேயே இவளை கங்கைக்கு மூத்த சகோதரி என்கின்றனர். விருத்த கங்கை என்று கூட இவளுக்கு ஒரு பெயரையும் சூட்டியிருக் கின்றனர். ஹரித்துவார் சென்று அங்கிருந்து ராமேஸ் வரத்தில் உள்ள ராமநாதனுக்கு அபிஷேகம் செய்ய கங்கை . நீரை எடுத்து வருபவர்கள் கோதாவரிக் கரைக்கு வந்ததும், தாம் கொண்டு வந்த கங்கையில் கொஞ்சம் எடுத்து அதனைக் கோதாவரியில் கொட்டிவிட்டு, அதற்குப் பதி லாக கோதாவரி நீரை கொஞ்சம் எடுத்து அதையும் கங்கையின் நீருடன் சேர்த்துக் கொள்வர். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்றபடி இப்படி அக்காளும் தங்கையும் கலந்து உறவாடியே ராமநாதனுக்கு அபிஷேகம் நடத்தியிருக்கிறார்கள் என்றும் அறிகிறோம். நாசிக் பஞ்சவடி, நகரங்களுக்கு இடையே தகதின வாகினியாய் ஒடும் இந்த கோதாவரி பின்னர் கிழக்கு நோக்கித்திரும்புகிறது. காசி கோதாவரிக்கு மேற்கிலும் தெற்கிலும் இருக்கிறது. பஞ்சவடி கிழக்கிலும் வடக்கிலும் இருக்கிறது. நாசிக் நகரத்திலிருந்து பஞ்சவடி செல்ல கோதாவரியின் பேரில் ஒரு நல்ல பாலம் கட்டியிருக் கிறார்கள். அது விக்டோரியாவாரவதி என்று அழைக்கப் படுகிறது. இது 1897-ம் வருஷத்தில் கட்டப்பட்டது என்றும் இதைக் கட்டியவர் காசிநாத மகாதேவதத்தே என்றும் அறிகிறோம். இந்தப் பாலத்தைக் கடக்குமுன் இக்