பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 மரித்து வந்திருக்கிறார். அவருக்கு விளக்குகளை ஏற்றி அந்த ஒளியில் அருட்பெருஞ் சோதியாம் இறைவனைக் காண்பதே பொழுது போக்காக இருந்து வந்திருக்கிறது. இப்படி வாழும் பக்கிரியாம் பாபாவிடம், கிராம மக்கள் முதலில் நெருங்காவிட்டாலும் நாளடைவில் நெருங்கி வந் திருக்கின்றனர். உணவு முதலியன கொண்டு வந்து கொடுத் திருக்கின்றனர்.இவருக்கோ தனக்கு உணவு என்பதைவிடத் தான் எரிக்கும் விளக்கிற்கு எண்ணெய் வேண்டுவதே பிரச் சினையாக அமைந்திருக்கிறது. அதற்காக அந்த வட்டா ரத்திலுள்ள வர்த்தகர்களை அணுகி எண்ணெய் பெற்றி ருக்கிறார், விளக்கெரித்திருக்கிறார். ஒரு நாள் அவரிடம் எண்ணெய் இல்லாதிருந்திருக்கிறது. அன்று எப்போதும் வழக்கமாகக் கொடுக்கும் வியாபாரிகளும் எண்ணெய் கொடுக்க மறுத்திருக்கின்றனர். அதனால் சிறிதும் கவலை யுறாமல், தன் பக்கத்தில் உள்ள பாத்திரத் தில் இருந்த தண்ணிரையே விளக்குகளில் ஊற்றி யிருக்கிறார். விளக்குகளும் விடிய விடிய தண்ணி ராலேயே எரிந்திருக்கின்றன. இந்த அதிசய சம்ப வத்தை கிராம மக்கள் ஒரு சிலர் பார்த்திருக்கின்றனர். செய்தி பரவ ஆரம்பித்திருக்கிறது. அதன் பின் தான் வட்டார மக்கள் இவரை ஒரு பெரிய மகான் என்று மதித் திருக்கின்றனர். இவரது தெய்வத்தன்மையை உணர்ந்திருக் கின்றனர். அ த ன் பின்பே அவரைச் சாயிபாபா என்று அழைத்து வந்து வணங்கியிருக்கின்றனர். சாயி என்றால் பாரசீக பாஷையில் மகான் என்று பொருள். பாபா என் றால் இந்தியில் தந்தை என்று பொருள். மக்களுக்கு எல் லாம் தந்தை போன்றவர் இந்த மகான் என்பதாலேயே சாயி பாபா என்று அழைத்திருக்கின்றனர். இதன் பின்னர்தான் பாபாவின் மகிமையை மக்கள் அறிய ஆரம்பித்திருக்கின்றனர். அவரை அணுகியவர் களுக்கு நோய் நீங்கிற்று. துன்பம் விலகிற்று, எண்ணியது முற்றுப் பெற்றது என்ற முறையில் நல்ல காரியங்கன் 2738–15