பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 சுதந்திரம் பெற மகாத்மா காந்தி சுதந்திரப் போரை முதன் முதல் ஆரம்பித்ததும் இங்கேதான். அதன் பின் காந்திஜி சபர்மதி நதிக்கரையில் ஒரு ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறார். கிட்டதட்ட பதினைந்து வருஷகாலம் அங்கேயே தங்கியிருந்து அவர் சுதந்திர, இயக்கத்தை வளர்த்திருக்கிறார். பின்னர் அங்கிருந்து தான் அவர் தம் தண்டிப் பயணத்தையும் துவக்கி யிருக்கிறார். - இந்துக்கள், முஸ்லீம்கள், சமணர்கள் எல்லோரும் அவர்களது பெரிய விழாக்களை இங்கே கொண்டாடி மகிழ்கிறார்கள். மார்ச்சு மாதத்தில் ஹோலிப் பண்டிகை நடக்கிறது. ஆ க ஸ் டி ல் மெக்காப் பண்டிகையும் கோகுலாஷ்டமி விழாவும் நடக்கிறது. அக்டோபரில் தீபாவளியும், ஜனவரியில் உத்தராயணமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சூலை மாதத்தில் ஜகதீசனை ரதத்தில் ஏற்றி ரதோத்சவமும் நடத்துகிறார்கள். இந்த நகரத்தில் பார்க்க வேண்டிய கட்டிடங்கள் பல உண்டு என்றாலும், அழகு வாய்ந்த இடமாகக் காணப்படுவது கங்காரியா ஏரிதான். பரந்து கிடக்கும் ஏரி மிகவும். அழகாக அமைந்திருக்கிறது. அதில் படகு விட்டு உல்லாச மாகப் பொழுது போக்குவதற்கும் வசதி செய்யப்பட்டிருக் கிறது. இந்த ஏரியை அடுத்து மலைத் தோட்டம் என்றபூங்காவும் இருக்கிறது. மனோரம்மியமான இடமாக இது அமைந்திருக்கிற காரணத்தால் பலரும் இங்கு வந்து உல்லாசமாகப் பொழுது போக்குகிறார்கள். இந்தப் பூங்காவை 1451ல் குத்புதீன் என்னும் சுல்தான் நிர்மாணித் தான் என்றும் அது 72-ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டிருக் கின்றதென்றும் சொல்கிறார்கள். தீன் தர்வாஜா, ஜும்மா மஜீத். ராணி சிப்லியின் சமாதி எல்லாம் கண்களைக் கவரும் வகையில் கட்டப்பட்ட கட்டிடங்கள். ஹைமத் கான் மசூதி சீதி சையத் மசூதி எல்லாம் கட்டிடக் கலையின் சிறப்பை எடுத்துக் காட்டுவனவாகும். அங்கு