பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30? கடன்கள் செய்ததாக கர்ணபரம்பரை கூறுகிறது. அதைப் போலவே பலராமனும் கிருஷ்ணனும் இங்கு வந்து பிதுர்க் கடன்கள் செய்திருக்கின்றனர். இக்கோயிலுள் உ ள் ள மூர்த்தியைப் பற்றிய புராண வரலாறு சுவையானது. தகஷ்ப் பிரஜாபதி என்பவனுக்கு 27 பெண்கள். அத்தனை பேரையும், அழகில் சிறந்தவனான சந்திரனுக்கே மணம் முடித்து வைத்திருக்கிறான். ஆனால் சந்திரனோ அந்த இருபத்தி ஏழு பெண்களில் அழகுமிகுந்தவளான ரோகிணி யிடமே அதிக அன்பைக் காட்டியிருக்கின்றான். மற்ற மனைவியரை உதாசீனம் செய்திருக்கிறான். மற்றப் பெண்கள் சென்று இதுகுறித்துத் தந்தையிடம் முறை யிட்டிருக்கின்றனர். அவர் .ெ சா ல் லி யு ம் கேளாது. சந்திரன் ரோகிணியிடமே மையல் கொண்டு வாழ்ந்திருக் கிறான். இதனால் கோபம் கொண்ட தrப்பிரஜாபதி சந்திரன் தன் கலை இழந்து நவியும் படி சபித்திருக்கிறான். அதன்படியே சந்திரனும் கலை இழந்து மெலிந்திருக் சிறான். கடைசியில் சந்திரன் சிவபெருமானை அணுகிப் பிரார்த்திக்க அவர் கலை வளர அருள் புரிந்திருக்கிறார். இந்த நன்றி காரணமாகவே சோமன் என்னும் சந்திரன் இந்த இடத்தில், ஒரு சோதிர் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வணங்கியிருக்கிறான். சோமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் ஆனதினாலே சோமநாதர் என்ற பெய ராலேயே அவர் அங்கு கோயில் கொண்டிருக்கிறார். சந்திரனையும் அவனைச்சுற்றியுள்ள நட்சத்திரங்களையும் வைத்து ஒரு சுவையான கதையையே உருவாக்கியிருக் கிறார்கள் நமது முன்னோர்கள். ஆதியில் இக்கோயில் தங்கத்திலேயே கட்டப்பட்டிருக் கிறது. பின்னரே வெள்ளியாலும் அதன் பின்னர் மரத் தாலும் கல்லாலும் கட்டப்பட்டது என்பது கதை. இக் கோயில் ஐந்து தடவை அழிந்து அழிந்து திரும்பத் திரும்பக் கட்டப்பட்டது என்பது வரலாறு. கிறிஸ்து சகாப்தம் ஆரம்பிப்பதற்கு முன்பே இக் கோயில் இருந்திருக்கிறது.