பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 சோமநாதபுரத்திற்குப் பக்கத்திலேயே ப ார் க் க வேண்டிய இடங்கள் இரண்டு உண்டு. ஒன்று அகல்யாபாய் என்ற ராணிகட்டிய கோயில், அகல்யாபாய் கோயில் என்று வழங்குகிறது. அங்கு கோயில் கொண்டிருப்பவர் கரணீசர். அங்கே விநாயகர், திருமால், முதலியவர்களுக்கும் சந்நிதியிருக்கிறது. தேகோத்சர்க்கம் என்ற இடத்தில்தான் துவாரகாபதியான கண்ணன் தன் உடலை நீத்து சுவர்க்கம் சென்றிருக்கிறார். அதிலேயே சுவர்க்காரோகணம் என் கின்றனர். பக்கத்தில் ஒடும் நதியை ஹிரண்யாநதி என் கின்றனர். அந்நதிக்கரையில்தான் ஒரு குரா மரம் இருக் கிறது. அம்மரத்தின் அடியில்தான் பகவான் கிருஷ்ணன் வேடன் ஒருவனது அம்பால் அடிபட்டு, அதன் பின் திருமேனியை இவ்வுலகில் விட்டு விட்டு வானுலகம் சென்றி ருக்கிறான். அங்கு பல தலைகளுடன் கூடிய பாம்பின் சிலை ஒன்றும் இருக்கிறது. அங்குதான் பலராமர் தன் சரீரத்தை விடுத்திார் என்பது வரலாறு. அங்கே லட்சுமிநாராயணன் கோயில், பீமேஸ்வரர் சந்நிதி எல்லாம் இருக்கின்றன. சோமநாதபுரத்தை வணங்க வந்த நாம்லட்சுமிநாராயணன் அவருக்கும் வணக்கம் செலுத்தியே மேல் நடக்கின்றோம்.