பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. ஜாம் நகர் சமணக் கோயில்கள் ஜாம் நகர் சமணக் கோயில் சைவமும் தமிழும் தழைத்திருந்த நாடு தமிழ் நாடு என்பது உலகறிந்தது. சைவத்துடன் வைஷ்ணவமும் தமிழகத்தில் இணைந்து வாழ்ந்தது, வளர்ந்தது என்பதற்கு நாட்டில் அன்று தொட்டு இன்றுவரை பயிலப்படும் தேவார திருவாசகங்களும், திவ்யப் பிரபந்தங்களும், சான்று பகரும். அப்படி இருந்தும் சைவ வைணவ வேற்றுமைகளை மிகைப் படுத்துவார் கூட்டமும் கூடவே இருந்து வந்திருக்கிறது. என்றாலும், இவ்விரு பெரிய சமயங்களும் அதிகம் மோதிக் கொண்டதில்லை. அதைப் போலவே வடநாட்டில் பிறந்து இந்திய நாடு முழுவதும், பரவி இருந்த சமயங்களும் இரண்டு. ஒன்று சமணம்,