பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 ஜீவன்கள் பின் பற்றினால் மீண்டும் பரம சுகமடையலாம் என்பதே ஜிநனைப் பின்பற்றும் சமணர்கள் நம்பிக்கை. கொல்லா விரதமே அவர்களின் மூலமந்திரம். பரமாத்மனே அவர்கள் தெய்வம். எல்லா உயிர்களிடத்தும் அன்பும் தயவும் பூண்டு அவைகளுக்கு இதமே செய்தல், உண்மை பேசுதலே வேள்வி என்றும், தனக்குள் அநாதிகாலமாகப் படிந்து உரம் பெற்றுள்ள கர்மமாகிற களங்கத்தினை தியானமாகிற அக்கினியால் எதிர்த்து ஒழித்து, ஆத்ம ஜோதியைப் பெறுவதே தவம் என்றும், சம்சாரம் அநித்யமாகையால், வீடே பெறற்பாலது, வீடுபெறும் வழி, நற்காட்சி, நல்ஞானம் மூன்றும் தலைப்பட்டு நிற்பது என்றும் உணர்த்தி, சத்யாத்வரதம் எனப் பெயர் பூண்டு விளங்கும் சமயமே சமணசமயம் என்றெல்லாம் நாம் அறிகிறபோது, அப்படி உபதேசித்த ஜிநனை நோக்கி நம் தலை தானாகவே தாழும். இன்று நம் நாட்டில் குஜராத் பகுதியில்தான் சமணர்கள் நிறைந்திருக்கின்றனர். அவர்கள் கட்டிய கோயில்களும் பல இருக்கின்றன. அவைகளில் சிறப் பானவை கும்பாரிய கோயில்கள் என்கின்றனர். இன்னும் பாலிடானா, சத்துருஞ்சயா என்னும் இடங்களில் உள்ள சமணக் கோயில்கள் எண்ணிக்கையிலும் அளவிலும் பெரியவை என்றனர். எனது பிரயாணத் திட்டத்திலோ இவைகள் இடம்பெறவில்லை. ஆதலால் அங்கெல்லாம் காரிலேயே செல்வது அவ்வளவு எளிதான காரியமாகவும் இருக்கவில்லை. ஆதலால் சமணக் கோயில்கள் நிறைந்த ஜாம்நகரையே சுற்றினேன். அங்குள்ள கோயில்களுக்கு எல் லாம் சென்றேன். வணங்கினேன். அது காரணமாகத்தான் உங்களையும் இன்று ஜாம் நகருக்கே அழைத்துச் செல் கிறேன். ஜாம்நகர் சமணர் கோயில்களைப் பார்த்தால் குஜராத்திலுள்ள எல்லாச் சமணக் கோயில்களையுமே கண்டதுபோலத்தான். அகமதாபாத்திலிருந்து ராஜ்காட் வழியாக துவாரகை செல்லும் ரயில் மார்க்கத்தில் ஜாம்