பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஐந்து சமணமதச் சார்பும் உடையவை. சரிதான். இங்கு இந்து சமயம், பெளத்தம், சமணம் - மூன்றும் சேர்ந்தே உறவாடுகின்றன. தேசிய ஒருமைப்பாடு என்று பலபடப் பேசும் இந்நாளில் இன்றைக்கு ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே சமய ஒருமைப்பாடு, கலை ஒருமைப்பாடு களுக்கு நமது கலைஞர்கள் வித்திட்டு வைத்திருக்கிறார் களே என்று அதிசயிருக்கிறோம். பெளத்தக் குடைவரை களில் சிறப்பானது பத்தாவது குடைவரையே. அதனையே விஸ்வகர்ம சைத்தியம் என்பர். வாயிலே, மிகுந்த வேலைப் பாட்டுடன் உருவாகியிருக்கும். அது ஏதோ மரத்தினால் செய்த வேலை என்று தோன்றுமே தவிர கல்லில் செய்தது என்று எண்ணமுடியாது. அவ்வளவு நுணுக்கமான வேலைப் பாட்டோடு கலை அழகு நிரம்பியதாகவும் இருக்கும். எண்பத்து ஐந்து அடி நீளமும், முப்பத்து நான்கு அடி அகலமும் உள்ள அந்தக் குடைவரை ஐம்பது அடி உயரத்தில் கஜப்பிரஷ்ட ஆகிருதியோடு விளங்குகிறது. அங்கு பதினாறு அடி உயரத்தில் ஒரு ஸ்தூபமும், அந்த ஸ்துாபத்தின் முன்னால் பன்னிரெண்டு அடி உயரத்தில் ஒரு புத்தரும் உருவாகியிருக்கிறார்கள். போதிமரத்தடியில் ஞானோதயம் பெற்ற நிலையில் புத்த பகவான் காட்சி தருகிறார். இங்குள்ள குடைவரைகளில் மேல்கோடியில் இருப்பதுதான் சமணக் குடைவரைகள். அவைகளில் இந்திரசபா என்னும் குடைவரை இரண்டு அடுக்கு மாடி யோடு விளங்குகிறது. மாடியில் உள்ள மண்டபத்தை சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பன்னிரெண்டு துர்ண்கள் தாங்கி நிற்கின்றன. அங்குள்ள மகாவீரர், தீர்த்தங்கரர்கள் எல் லாம் அழகுவாய்ந்தவை. அங்குதான் இந்திரன் கொலு இருக் கிறான். ஆனால் இத்தனையும் தூக்கி அடிக்கும் வகையில் இங்கு பதினாறாவது குடைவரையாக உருவாகி இருப்பது தான் கைலாயநாதர் குடைவரை. இக்குடைவரை தான் உலகத்தில் உள்ள குடைவரைகளில்எல்லாம் சிறந்தது என்று கலைவல்லுநர்கள் கூறுகிறார்கள். This is the grandest monolithic carved out of a single rock excavation