பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. அதிசயம் கண்டோமே ஒரு அரசகுமாரனுக்கு பக்கத்து ராஜ்யத்தில் உள்ள ராஜகுமாரியை மணம் பேசுகின்றனர். திருமணம் நிச்சய மாகிறது. திருமண ஏற்பாடுகளும் சிறப்பாக நடக்கிறது. ராஜகுமாரி இருக்கும் நகரை நோக்கி ராஜகுமாரன் புறப் படுகிறான். அவன் ஒரு பெரிய யானை மீது அமைக்கப்பட் டிருக்கும் அம்பாரியில் வீற்றிருக்கிறான். மந்திரி பிரதானிகள் எல்லாம் முன் நடக்கின்றனர். கோலாகலமாக மாப்பிள்ளை அழைத்து செல்லப்படுகிறார். மங்கள வாத்தி யங்கள் முழங்குகின்றன. பெண்களின் வாழ்த்தொலிகள் வானையே பிளக்கின்றன. பெண்ணிருக்கும் நகரை இந்த மாப்பிளை அழைப்பு ஊர்வலம் நெருங்குகிறது. அந்தச் சமயத்தில் ஒரு சிறு ஆட்டுமந்தையை சிலர் ஒட்டிச் செல். வதை யானைமீது ஊர்ந்து வரும் ராஜகுமாரன் பார்க், கிறான். இந்த மந்தை எங்கே செல்கிறது. எதற்காகச் செல் கிறது என்று கேட்கிறான் ராஜகுமாரன். பக்கத்தில் வந்தவர்களில் ஒருவர் இந்த ஆடுகள் எல்லாம் மணப்பெண் இருக்கும் அரண்மனைக்கே செல்கின்றன. அங்கு அவற்றை எல்லாம் கொன்று கறி சமைத்து, திருமணம் காணவந்திருப் பவர்களுக்கு சிறந்த விருந்து நடத்தப்படும் என்கிறார். அவ்வளவுதான் யானை மீதிருந்த மணமகன் கீழே குதித்து விட்டான். தன் திருமணத்திற்காக இத்தனை ஆடுகள்: பலியிடுவதா, இப்படித்தான் உலகம் உயிர்வதை மூலமாக முன்னேறுகிறதா என்று எண்ணியவனாய், அந்த உலக வாழ்வையே துறக்கக் தீர்மானித்து விடுகிறான். விடு விடு என்று காட்டிற்கே ஒடுகிறான். உலக இன்பங்களை எல்லாம் வெறுத்து கடுந்துறவு பூணுகிறான். அருந்தவமே ஆற்றுகிறான் ராஜகுமாரன். அரசகுமாரன் இப்படித் துறவு பூண்டு ஒடிய விவரத்தை மணமகளாக இருந்த ராஜ