பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 யலங்காரக் கலையில் வல்லவர்கள், அப்படி அலங்காரம் செய்து கொள்ளும் ஒர் அரசிளங்குமரியையும் அவள் சேடி களையும் ஒரு குடைவரையில் காண்போம். இதைத்தான், This ia a master piece of painter's brushwork Grörgy ஆங்கிலக் கலா விமரிசகர்கள் கூறுகிறார்கள். இப்படி எத்தனை எத்தனையோ சித்திரங்கள். சிற்ப படிவடிவத் திற்கு எடுத்துக்காட்டாக முதல் குடைவரையிலேயே ஒரு புத்தர் இருக்கிறார். ஒரே சிலைதான் என்றாலும் மூன்று கோணங்களில் இருந்து காணலாம். ஒவ்வொரு கோணத் திலும் ஒவ்வொரு உணர்ச்சியை வெளிப்படுத்துபவராக அமர்ந்திருப்பார். இங்குள்ள துரண்களும் விதானங்களும் எப்படி அமைந்தன என்று சொல்ல முடியாது. குந்தாலி செய்த வேலையோடு சிற்றுளி நயங்களும் சேர்ந்தே அங்கே கலை அழகை உருவாக்கி இருக்கின்றன. அஜந்தாவைப் பற்றி இன்னும் அதிகம் சொல்ல விரும்பவில்லை. நேரில் சென்று கண்டு மகிழவேண்டிய அற்புதமான கலைக் கோயில் அது. அஜந்தாவையும் எல்லோராவையும் ட த் த. பின்னாலே இதற்கு மேலே என்ன இருந்து விடப்போகிறது என்று எண்ணுவோம். ஆனால் ஆபூமலை சென்று அங்குள்ள டில்வாரா என்னும் பகுதியில் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாகி இருக்கும் சமணக் கோயில்களில் இரண்டைப் பார்க்காமல் இருத்தல் கூடாது. அற்புத மலையே ஆபூமலை எனக் குறுகி இருக்கிறது. அங்கு இருக்கும் கோயில்கள் இரண்டுமே அற்புதக் கோயில்கள்தாம். இரண்டு கோயில்களும் அடுத்தடுத்தே. இருக்கின்றன. இவைகளில் ஒன்று ஆதிநாதர் கோயில் என்றாலும் அக்கோயில் ஆதிநாதர் கோயில் என்று வழங்கப் படவில்லை. அக்கோயிலைக் கட்டிய விமலாகதா என் பவன் பெயரால் விமலவாசிகி என்றே அழைக்கப்படுகிறது. கோயில் வாயிலிலேயே இக்கோயில் முதலாம் பீமதேவரது. ஆஸ்தானத்தில் இருந்த அமைச்சன் விமலாrாவினால்