பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 என்ற பாடலை நம் வாய் நம்மை அறியாமலே முணு முணுக்கும். படகில் சென்றால் நாம் காண்பது ஜக்மந்திர் ஜக் நிவாஸ் என்னும் இரண்டு அரண்மனைகள். இவை இரண்டில் ஜக்மந்திர்தான் சிறப்பானது. மொகலாய மன்னனான ஷாஜஹான், அவன் தந்தையின் காலத்தே குர்ரம் இளவரசனாக இருந்திருக்கும் போது இங்கு வந்திருக்கிறான். இந்த அரண்மனையில் தங்கி இருக் கிறான். இங்குதான் பின்னர் அவன் தன் மனைவியின் சமாதி மேல் உருவாக்கிய தாஜ்மஹாவின் கரு உருவாகி யிருக்கிறது. உலகப் பிரசித்திப் பெற்ற கனவு மாளிகை தாஜ்மஹால் உருவாவதற்கு இந்த ஜக்மந்திர் கருவாய் அமைந்திருந்தது என்று சொன்னால் அந்த மாளிகையை பற்றி மேலும் சொல்ல வேண்டுமா என்ன? ஜக் நிவாஸ், மகாராணா ஜகத்சிங்-1 என்பவரால் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது என்று சரித்திரம் கூறுகிறது. நாலு ஏக்கர் விஸ்தீரணத்தில் அமைந்த இந்த அரண்மனையின் உத்தியான வனங்களும், வண்ணப் படங்களும், அலங்கார சாமான்களும் மிக மிக அழகாக இருக்கின்றன. பிச்கோலா ஏரியின் வட புறம் ஒரு பெரிய ஏரி இருக் கிறது. இதனையே பத்தே சாகர் என்கின்றனர். பழைய ஏரியை மகாராஜாபத்தேசிங் புதுப்பித்திருக்கிறார். இதுவும் இரண்டு சதுரமைல் பரந்து கிடக்கிறது. இந்த ஏரியைச் சுற்றி அமைந்திருக்கும் பாதை அழகாக வளைந்து வளைந்து செல்கிறது. இதை ஒட்டியே மலைத் தோட்டம் இருக்கிறது. பூரண நிலவொளியிலே இந்த ஏரியில் படகு களில் அமர்ந்து உல்லாசமாய்ச் சுற்றி வருவது ஓர் அற்புத அனுபவமாக இருக்கும் என்று தெரிகிறது. சரிதான்! கேத்திராடனம் புறப்பட்ட எங்களை ஏதோ ஏரிகளுக்கும் அரண்மனைகளுக்குமே இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறீரே, இங்கே கோயில்கள் ஒன்றும்