பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 அத்துடன் ஒருவரை ஒருவர் நெருக்கமாக அனைத்துக் கொண்டிருக்கும் காதலர் வடிவங்கள்தாம் எத்தனை! இன்னும் விண்ணில் பறக்கும் கந்தருவர்கள், யr யகசினி யர்கள் வேறே. கோயில் சுவரில் எல்லாம் பட்டை பட்டை யாய் மூன்று நான்கு அடுக்குகளில் காத்திரமான சிற்ப வடிவங்கள், அவைகளில் சிறப்பானவை பெண்களின் வடிவங்களே. அப்பெண்ணின் அங்கங்கள் எல்லாம் நல்ல உயிர்த் துடிப்போடு விளங்கும். இவர்களுக்கிடையேதான் கருவறையில் லிங்க உருவில் மகாதேவர் எழுந்தருளி யிருப்பார். - இக்கோயிலுக்கு வடபுறம் தேவி ஜகதாம்பாள் கோயில். அதற்கு அடுத்து சித்திரகுப்தர் கோயில் என்பர். ஆனால் அங்கு மூல மூர்த்தியாக நிற்பவர்குரிய நாரா யணனே. இந்த வட்டாரத்தின் வட கிழக்கு மூலையிலே தான் விஸ்வநாதர் கோயில். அக்கோயிலுக்கு எதிரே நந்தி மண்டபம். இந்த விஸ்வநாதர் கோயில் சுவர்களிலே தான் பழக்குலையையும் கிளியையும் ஏந்தி நிற்கும் பெண் ணொருத்தி, குழந்தையுடன் கொஞ்சி மகிழும் மங்கை ஒருத்தி; வேணுகானம் செய்யும் மங்கை ஒருத்தி உருவாகி இருக்கிறார்கள். இக்கோயிலுக்கு தென்மேற்குப் பக்கத் திலே பார்வதிக்கு என்று ஒரு தனிக்கோயில். அதற்கும் தெற்கே லட்சுமணன் கோயில் என்று அழைக்கப்படும் விஷ்ணு கோயில் ஒன்று. இந்தக் கோயில்தான் கந்தேலிய மகாதேவா கோயிலுக்கு அடுத்தபடியான பெரிய கோயில், இங்கு மூலவராக நிற்பவருக்கு மூன்று முகங்கள். ஒன்று மனித முகம். மற்றவை வராக முகமும், நரசிம்ம முகமும், இப்படி ஒருவடிவம் எங்குமே காணக் கிடைக்காத ஒன்று. இன்னும் இங்கே பிரம்மாவும் சிவனும் தனித்தனி சந் நிதியில் நிற்கிறார்கள். இக்கோயிலை அடுத்து இருப்பது மதங்கேசர் கோயில். இக்கோயில் வாயிலிலே தனியாக ஒரு மண்டபத்திலே பெரிய வராகம் ஒன்றும் நிற்கும். ஒன்பதடி நீளமும் ஆறு அடி உயரமும் உள்ள இ ந் த 27 38–2