பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. பழைய டில்லியில் யூரீதிகம்பர் கோயில் முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே என்று எல்லாம் வல்ல இறைவனைப் பாடுகிறார். மணி வாசகர், நாம் அப்படியே நம்நாட்டின் தலைநகரான டில்லி யைப்பற்றியும் பாடலாம். அந்தப் பழைய இதிகாச காலத்திலேயே பெருமையுற்றிருந்த நகரம் அது. அதன் பின்னர் எப்படி எப்படி எல்லாமோ உருமாறி, இன்று திரும்பவும் புதுமை எல்லாம் நிறைந்த நகரமாக விளங்கு கிறது. அது. அதன் சரித்திரத்தில் எத்தனை ஏற்றங்கள், எத்தனை தாழ்வுகள், அத்தனைக்கும் ஈடுகொடுத்து அல்லவா அந்நகரம் அன்று முதல் இன்றுவரை தலைதுாக்கி நிற்கிறது. பாரதத்தின் கதாநாயகர்களான பாண்டவர்கள், அஸ்தினாபுரத்தை ஒட்டி ஒரு புதிய ந க ைர சிருஷ்டி, பண்ணி, அதனை இந்திரப்பிரஸ்தம் என்று அழைத்தனர். அங்கு வந்திருந்த கெளரவர்கள் அகெளரவப்படுத்தப் பட்டார்கள். அதனால்தான் தாயாதிச் சண்டை வலுத்தது. சூதிலே தோற்ற பஞ்சபாண்டவர்கள் நாட்டை விட்டுக் காட்டிற்குத் துரத்தப்பட்டார்கள் என்பது இதிகாச வரலாறு. அ ந் த பஞ்சபாண்டவர்கள் நிர்மாணித்தி, இந்திரப்பிரஸ்தமே இந்த டில்லி மாநகரம் என்பது ஒரு வரலாறு. இதற்கு ஆதாரமாக நிற்பதுதான் புராணகிலா என்னும் பழைய கோட்டை. ஆனால் இந்த இடத்தில்தான் இந்திரப்பிரஸ்தம் இருந்தது என்பதற்கு யாதொரு. ஆதாரமும் இல்லை தான். என்றாலும் புராணகிலா