பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 520-அடி நீளமும், 465-அடி அகலமும் உள்ளது. ஆம். இது தஞ்சை பெரிய கோயில் அளவிலே இருக்கிறது. இக்கோயில் பிரகாரத்தில் 65 சிறு சிறு கோயில்கள். பிரதான லிங்கராஜ் கோயில் நர்த்தன மண்டபம், மகாமண்டபம் கருவறை என்று மூன்று பகுதியாக இருக்கும். கருவறை மேலே விமானம் 127-அடி உயரம். உருண்டு திரண்டு நிற்கும் கோயிலினுள் இருப்பவர் திரிபுவனேஸ்வரர். அவரையே லிங்கராஜ் என்று அழைக்கின்றனர். கோயில் உட்புறச்சுவர்களில் சிற்ப வடிவங்களே கிடையாது. இதற்கு வட்டியும் வாசியமாக சுற்றுப்புறத்தில் எல்லாம் சிற் பங்கள். மிக்க அழகான கணபதி வடிவம் கருங்கல்லால் அழ காக உருவாகி பள பள என்றிருக்கிறது. கோயில் பிரகாரத்தில் பகவதி, பார்வதி, ஆனந்த வசுதேவர், பிர்மேஸ்வரர், பாஸ்ரேஸ்வரர், ேக த ா ரே ஸ் வ ர ர் கோயில்கள் எல்லாம் இருக்கின்றன. இவைகளில் பரசு ராமேஸ்வரர் கோயில்தான் காலத்தால் முந்தியது என்பர். இக்கோயிலில் பல பல சிற்பவடிவங்கள். அவை களில் சிறப்பானது சிவ பார்வதி திருமணக்கோலம்தான். லிங்கராஜ் கோயிலுக்கு அடுத்தபடியாக நாம் காண வேண்டுவது ராஜாராணி கோயில். இங்குதான் அற்புதம் அற்புதமான சலபாஞ்சிகை வடிவங்கள் இருக்கின்றன. கொடியடியில் நிற்கும் அம்மடக்கொடிகளை கண்டால் அவர்கள் அங்கமெல்லாம் அழுகு வடியும், இங்குள்ள மற்ற கோயில்கள் எல்லாம் சென்று காண அவகாசமில்லை என் றாலும், முக்தேஸ்வரர் கோயிலைக் காணாமல் திரும்புதல் கூடாது. இக்கோயில் 975-ல் கட்டப்பட்டிருக்கிறது. இக் கோயில் முகப்பிலே கல்லாலேயே அமைந்த தோரண வாயில் மிக்க அழகோடு விளங்கும். நுணுக்கமான சிற் றுளியின் நயமெல்லாம் தெரியும்படி அமைத்திருக்கிறான் சிற்பி. புவனேஸ்வரத்துக்கு நாற்பது மைல் துாரத்திலே பூரிஜகந்நாதர் கோயிலும் இன்னொரு திசையில் நாற்பது மைல் தூரத்தில் கோனாரக் சூரியன் கோயிலும் இருக் கிறது. ஜகந்நாதன் தன் சகோதரன் பலராமன் சகோதரி