பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. அமரநாதத்து ஈசன் அமரநாதத்து ஈசன் தென்னாடுடைய சிவனே போற்றி எங்காட்டவர்க்கும் இறைவா போற்றி" என்று மணிவாசகர் முழங்குகிறார். அந்த முழக்கத்தையே இன்று நாமும் பல பல கூட்டங்களில் கேட்கிறோம். தென்னாடுடைய சிவன், என்பதால் இந்த சிவ வழிபாடு தென்னாட்டில் தான் தோன்றியிருக்க வேண்டும் என்பதே பல சைவப்பெருமக்களின் சித்தாந்தம். அதற்கேற்ப சிவலிங்க வழிபாடும் பொங்கழல் உருவனான அண்ணா மலையிலேயே எழுந்திருக்கிறது. அதன் பின்னரே நாடு முழுவதும் சோதிர்லிங்கங்கள் தோன்றியிருக்கின்றன என்று