பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 எல்லாமே நம் தமிழ் நாட்டுக் கோயில்களைப் போலவே திராவிட சிற்ப முறையில் அமைந்திருக்கும். இவைகளில் முக்கியமானவை சாந்திநாத பஸ்தி, பார்சவராத பஸ்தி, சந்திரகுப்த பஸ்தி சாமுண்டாலியபஸ்தி என்பவையே. இங்குள்ள மகாநவமி மண்டபம், அதில் உள்ள தூண்கள் எல்லாம் நல்ல சிற்ப வேலைப்பாடு அமைந்தவை. ஒன்று சொல்ல மறந்து விட்டேனே. இத் தலத்தில் உள்ள கோமதேஸ்வரர் தீர்த்தங்கரர், பரதேஸ்வரர் முதலிய வடிவங்கள் எல்லாமே திகம்பர வடிவங்கள் ஆடை ஒன்றும் அணியாது. பூரண நிர்வாண நிலையிலேயே இருப் பவர்கள். இவர்களைப் பார்க்கும்போது இரண்டு நகைச் சுவை துணுக்குகள் ஞாபகத்திற்கு வரும். தமிழ் நாட்டில் ஒரு ஏர் வைத்து உழுது விவசாயம் செய்து அதனால் பொருள் எல்லாம் இழந்து, ஒரே கோவணத்துடன் ஒடிய விவசாயி இந்த சமண விக்கிரகம் ஒன்றைப் பார்த்தபோது ஐயனே நான் ஒரு ஏர் வைத்து விவசாயம் செய்து இந்தக் கோவணத்தோட இருக்கிறேன். நீ எத்தனை ஏர் வைத்து விவசாயம் செய்து இப்படிக் கோவணமும் இல்லாமல் நிற்கிறாய் என்று கேட்டாராம். இந்த திகம்பர வடிவங் களைக் கம்பனும் கண்டிருக்கிறான். இந்திர சித்தனை இலக்குவன் கொன்று தீர்த்துவிட்டான் என்பதை அறிந்த தேவர்கள் எல்லாம், தங்கள் ஆடைகள் அவிழும் வண்ணம் ஆடிப்பாடி இருக்கிறார்கள். இதைச் சொல்கிறான் # ŘADĚ #3ðf, எல்லோரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது கொல்லாத விரதத் தார்தம் கடவுளர் கூட்டம் ஒத்தார். என்று கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க உதவி செய்த இந்த சமண முனிவர் பெருமக்களும் நகையாடு வதற்கு உரியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆம் அப்படித்தான் இருக்கிறது உலகம்!