பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 சரி என்று மனதைக் கடிவாளம் போட்டு இழுத்து நம் வசம் படுத்திக் கொண்டு கோயிலுள் நுழையலாம். கோயி லுள் முதலில் இருப்பது நவரங்க மண்டபம். அடடே இது என்ன! இங்கு இந்த மண்டபத்தை தாங்கி நிற்கும் துண் கள் ஒவ்வொன்றும் அற்புத வேலைப்பாடுகள் அமைந்த தாக அல்லவா, இருக்கிறது. இவைகளில் சிறப்பாயிருப்பது இரண்டு தூண்கள். ஒன்று நரசிம்ம வடிவம் தாங்கியது. இன்னொன்று மோகினி வடிவம் தாங்கியது. இன்னும் ஒரு கடலை அளவே உள்ள இடத்தில் ஒருநந்தியையும் செதுக்கி யிருக்கிறார்கள் சிற்பி. சிற்றுளியின் நயம் எல்லாம் சிறிய வடிவிலேயும் காட்டலாம் என்று காட்டுகிறார் அவர் நமக்கு. இந்த நந்தியையே கடலை பகவான் என்கிறார் கள். துரண்களைக் கொஞ்சம் மறந்து மேலே பார்த்தால் அங்கு எண்கோண வடிவத்தில் ஒரு விதானம். பத்தடி குறுக்களவும் ஆறு அடி ஆழமும் உள்ளதாக இருக்கும். இந்த விதானத்திற்கும் தூண்களுக்கும் இடையில் ஒவ்வொரு பெண்ணின் வடிவம். இவை நல்ல காத்திர மான வடிவங்கள். இந்த மதனிகை வடிவங்கள் அற்புத மான அழகு வாய்ந்தவை. இவைகளில் ஒன்றே நடன சரஸ்வதி. இந்த வடிவங்களை அமைப்பதில், மிகுந்த அக்கறை எடுத்திருக்கிறார் சிற்பி என்பதை வடிவங்களைப் பார்த்தாலே தெரியும். இன்னும் இப்படிப்பட்ட மதனிகை சிற்பவடிவங்கள், மற்ற ஹொய்சலர் கோயில்களான சோமநாதபூரிலே ஹலபீடிலோ இல்லை என்பதும் இவ் வடிவங்களுக்கு ஒரு பெருமை தருவதாக இருக்கும். இப்படி சிற்பவடிவங்களிலே உள்ள பெண்களையே பார்த்துக் கொண்டிருந்தால், போதுமா, கோயிலுக்குள் வந்து சென்னக்கேசவரைத் தரிசனம் செய்ய வேண்டாமா என்று நீங்கள் முனு முனுப்பது என் காதில் கேட்கிறது. சரி இனி கருவறையை நோக்கியே நகருவோம். கருவறைக்கு முன்னேயுள்ள அந்தராளத்தை இங்குள்ள கோயில்களில் சுதநாசி என்கின்றனர். இந்த சுதநாசியின் வாயிலில்