பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வேங்கடம் முதல் குமரி வரை

என்று தலபுராணம் போற்றி வணங்குகிறது. இதே சட்டைநாதர் முத்துச் சட்டைநாதர் என்ற பெயரோடும் வலம்புரி மண்டபத்தில் யோக ஸ்தானத்தில் அஷ்ட பைரவர் உருவிலும் காட்சி கொடுக்கிறார் இக்கோயில் உள்ளேயே.

இவர்களையெல்லாம் பார்த்த பின்னர் வெளியே வந்து பிரம தீர்த்தத்தைச் சுற்றிக் கொண்டு திருநிலைநாயகி சந்நிதி சென்று வணங்கலாம். அதன்பின் ஞானசம்பந்தர் கோயிலுள்ளும் நுழைந்து அங்கு சிலை உருவில் இருக்கும் ஞானசம்பந்தரையுமே கண்டு தொழலாம். ஒரு அர்ச்சனையுமே செய்யச் சொல்லலாம். அப்படிச் சொன்னால் ஓர் உண்மை விளங்கும். முருகப்பெருமானுக்கு உரிய அஷ்டோத்தரத்தைச் சொல்லியே அர்ச்சனை செய்வார் அர்ச்சகர். இது என்ன என்று வினவினால், முருகனது அவதார மூர்த்தம்தானே ஞானசம்பந்தர் என்ற விடை பெறுவோம். இப்போது தெரிகிறது, பெரியநாயகி ஏன் இறங்கி வந்து ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டினார் என்று. எத்தனை அவதாரம் எடுத்தாலும் தன் குழந்தையைத் தெரியாமல் போய்விடுமா தாய்க்கு? ஞானசம்பந்தர் பிறந்து வளர்ந்த இந்தத் தலத்துக்கு அப்பர் வந்திருக்கிறார்; சுந்தரர் வந்திருக்கிறார். இத்தலத்தின் புனிதத்தன்மையை உணர்ந்து இதை மிதிக்க அஞ்சி எட்ட இருந்து பார்த்து விட்டே திரும்பியிருக்கிறார் சுந்தரர்.

முத்தியும் ஞானமும் வானவர் அறியா
முறைமுறை பலபல நெறிகளும் காட்டி,
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்
கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே

என்பதுதானே அவரது தேவாரம்.

இத்தலத்தின் சரித்திர ஏடுகளைப் புரட்டினால் எவ்வளவோ விஷயங்கள் அறியலாம். இக்கோயிலில் நாற்பத்து ஏழு கல்வெட்டுகள் இருக்கின்றன. சோழ மன்னர்களது கல்வெட்டுகளோடு வீர விருப்பண்ண