பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

163

காடு இடமாக நின்று
கன லாடும் எந்தை
இடமாய காதல் நகர்தான்,
வீடு உடன் எய்துவார்கள்
விதி என்று சென்று
வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுஉடன் ஆடு செம்மை
ஒலி வெள்ளம் ஆரும்
நனிபள்ளி போலும் நமர்காள்

என்பதே சம்பந்தர் பாடிய பாடல். நாமும் சம்பந்தர் பாடிய பாடல்களைப் பாடிக் கொண்டே செல்லலாம். (நான் இந்தக் கோயிலுக்குச் சென்றது நான்கு வருஷங்களுக்கு முன். அன்று

நனிபள்ளி விமானம்

கோயில் கவனிப்பாரற்றுக் கிடந்தது. கோபுர வாயிலுக்குக் கதவு கூட இல்லை . ஏதோ தட்டி வைத்து அடைத்திருந்தார்கள். நாடெல்லாம் கும்பாபிஷேகம் நடக்கும் இந்நாளில், இக்கோயிலும் செம்மை செய்யப்பட்டிருக்கிறதோ என்னவோ?') இந்தக் கோயில் உள்ளே இருக்கிற மூர்த்தியை விட வெளியே கோஷ்டத்தில் இருப்பவர்கள்