பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167

18

மயூரத்து மயிலாடு துறையார்

ருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி!

என்று இளங்கோவடிகள் காவேரியின் பெருமையைப் பாடுகிறார். இல்லை, காவிரிப்பூம் பட்டினத்தில் உள்ள பெண்கள் பாடிப் பரவுகிறார்கள். குடகு நாட்டிலே தலைக் காவேரி என்னும் இடத்திலே பிறந்தவள் காவிரி, கல்லும் மலையும் கடந்து மைசூர் ராஜ்யத்தை வளம் படுத்திப் பின்னர் சோழ நாட்டிலே புகுந்து மெல்ல நடக்கிறாள். இந்தக் கன்னிப் பெண். அவளது எண்ணமெல்லாம் சமுத்திர ராஜனிடத்துச் சென்று சேர்த்து அவனோடு கலந்து உறவாடுவதில் அல்லவா ஈடுபட்டிருக்கிறது. அதற்காக ஆயிரங் கரங்களை நீட்டிக் கொண்டு மிக்க ஆவலோடே விரைகிறாள். இவள் நடக்கும் வழியெல்லாம் ஒரே பச்சைப் பசும் கம்பளங்கள். வண்ணமலர் சூட்டி மகிழும் கோதையருக்குத்தான் கணக்கு உண்டா? வழியெல்லாம்