பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

199

தெற்கு வீதிக்கே சென்று அந்தத் தெற்கு வாயில் வழியாகவே கோயிலுக்குள் செல்லலாம். அந்த வாயிலுக்கு எதிரே நம்மை எதிர்நோக்கியே நிற்கிறாள் வாய்த்த திருக்குழலி. அவளைக் கண் குளிரத் தரிசித்து விட்டே அப்பர்.

முருகுவிரி நறுமலர்மேல், மெய்த்தவத்தோர்
துணையை, வாய்த்த
திருகுகுழல் உமை நங்கை பங்கன் தன்னை
செங்காட்டாங் குடியதனில் கண்டேன் யானே

என்று பாடியிருக்கிறார். நாமும் அவருடன் சேர்ந்தே பாடி வாய்த்த திருக்குழலியை வணங்கியபின் உள்ளேசெல்லலாம். இனி மேற்கு நோக்கி நடந்து மகா மண்டபத்தையும் கடந்து அர்த்த மண்டபத்துக்குச் சென்று கோயிலுள் இருக்கும் இறைவனையும் வணங்கலாம். வணங்கும்போதே ஓதுவார் ஒருவர் ஞானசம்பந்தர் பாடிய பதிகத்திலிருந்து,

நுண்ணியான், மிகப்பெரியான்,
நோவுஉளார் வாய்உளான்,
தண்ணியான், வெய்யான்,
தலைமேலான், மனத்துளான்,
திண்ணியான் செங்காட்டாங்
குடியான், செஞ்சடைமதியக்
கண்ணியான், கண்ணுதலான்
கணபதீச்சுரத்தானே,

என்ற பாட்டைப் பாடுவார். இந்தச் செங்காட்டாங் குடியுடையானைக் கணபதீச்சுரத்தான் என்று கூறுவானேன்? என்று கேட்கத் தோன்றும் நமக்கு. கஜமுகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடுக்கண் செய்ய, அவனை ஒழித்துக்கட்ட சிவ குமாரரான விநாயகர் யானை முகத்துடன் அவதரித்து அவனைச் சம்ஹரித்திருக்கிறார். இந்தக் கஜமுகாசுரனை சம்ஹரித்தபோது அவனது இரத்தம் செங்காடாய்ப் பெருகிய காரணத்தால் செங்காட்டாங்குடி என்ற பெயர் நிலைத்