பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/221

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

219

பதக்கங்கள் அணிவதை நிறுத்திவிட வேண்டியதுதான். வாய் திறந்து சொல்லக் கூடுமானால் அப்பரே இதைச் சொல்லுவார். அவர் மானசிகமாகக் கட்டளையிட்டதைத் தான் நான் சொல்லுகிறேன். பொன்னையும் மணியையும் கண்டு மயங்காதவர், தெய்வ அரம்பையைக்கூட கண்டு சித்தம் பிறழாதவர், நாம் செய்யும் இந்த அலங்காரங்களிலா மயங்கிவிடப்போகிறார்? மயங்கமாட்டார். சித்திரைச் சதயத்தில்தான் அவர் முத்தி பெற்றவிழா. ஏதோ 'சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன். திருப்புகலூர் மேவிய தேவதேவே' என்று அவர் பாடிவிட்டார் என்பதற்காக அப்பரைச் சிங்கம் விழுங்குவது போல் ஓர் அர்த்தசித்திர வடிவம் அமைத்துக் கீழைச் சுவரில் வைத்திருந்தார்கள். அதை எடுத்துவிட்டு லிங்கத் திருவுருவில் கலந்து நிற்பதாக இப்போது அமைத்திருக்கிறார்கள்.

இத்தலத்தோடு தொடர்பு கொண்டிருந்த தொண்டர்கள் நற்குன்றவாணர், சிந்தாமணி என்று இரண்டு பேரைப்பற்றித் தெரிந்து கொள்ளாமல் திரும்ப முடியாது. பழைய ஜயங் கொண்ட சோழ மண்டலத்தில், நற் குன்றத்தில் பெருநிலக் கிழார் ஒருவர் இருந்தார். நல்ல தமிழ்ப் புலமையும், சிவபக்தியும் நிறைந்தவர் அவர். பஞ்சத்தின் கொடுமையால் அரசனுக்குக் கட்டவேண்டிய வரியைக் கட்ட முடிய வில்லை. அதற்காக ஊரைவிட்டே வெளியேறித் திருப்புகலூர் வந்து சேருகிறார். மன்னனது சேவகர்களுமே பின் தொடர்கின்றனர். திருப்புகலூர் வந்தவர் அங்குள்ள ஞான கணபதியைக் காண்கின்றார்.

உரைசெய் மறைக்கும் தலைதெரியா
ஒருகொம்பை என்றே
பரசும் அவர்க்கும் பெருநிழல் ஆக்கும்,
பழனம் எல்லாம்
திரை செய்கடல் துறைச்
சங்கம் உலாவும், திருப்புகலூர்