பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

231

25

அழுந்தூர் ஆமருவியப்பன்

மிழ் நாட்டிலே சைவ வைஷ்ணவச் சண்டைகள் பிரசித்தம். 'ஆலமுண்டான் எங்கள் நீலகண்டன்' என்று சிவபக்தன் பெருமைப் பட்டுக்கொண்டால். 'ஆம்! அண்டமுண்டபோது அந்த ஆலமுண்ட கண்டனையும்கூட உண்டான் எங்கள் பெருமாள்' என்று பெருமைப்படாத விஷ்ணு பக்தன் இல்லை. இந்தச் சைவவைஷ்ணவச் சண்டைகள் எல்லாம் அவர்களது பக்தர்களுக்கு இடையில் தான். ஆனால் அவர்கள் இருவருமோ அத்தானும் அம்மாஞ்சியுமாக உறவு கொண்டாடிக் கொள்கிறார்கள். விஷ்ணுவோ தன் தங்கை பார்வதியையே சிவனுக்கு மணம் முடித்துக் கொடுத்து உறவைப் பலப்படுத்திக் கொள்கிறார். எல்லா ஊரிலுமே இரண்டு பேரும் குடித்தனம் வைத்துக் கொள்வார்கள். ஊருக்கு நடுவில் ஈசுவரன் கோயில் கொண்டிருந்தால், ஊருக்கு மேல் புறத்தில் பெருமாள் கோயில் அமைத்துக் கொள்ளுவார். காவிரி ஆற்றிடையே ஒரு தீவு ஏற்பட்டால், அதில் மேல் பாகத்தை விஷ்ணுவும், கீழ் பாகத்தைச் சிவனும் பங்கு போட்டு இடம் பிடித்துக்கொள்வார்கள்.தனக்கு எதிரேயே தன் மைத்துனன் கால் நீட்டிப்படுத்துக் கொண்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் இன்முகத்தோடேயே ஏற்றுக்