பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

வேங்கடம் முதல் குமரி வரை

உள்ள கம்பீர்யம் இல்லை. அங்குள்ள விமானம் 80அடி சதுர பீடத்தின் மேல் 216 அடி உயர்ந்திருக்கிறது. கங்கை கொண்டானுக்கோ தந்தையை விஞ்சவேண்டுமென்று ஆசை. ஆதலால் அடிப்பீடத்தை நூறு அடி சதுரமாக்கி அதற்கேற்ற உயரத்தில் - ஆம். சுமார் 300 அடி உயரத்தில் விமானத்தை உயர்த்தி விடவேண்டும் என்று எண்ணம். சிற்பிக்கோ, அடித்தளத்துக்கு ஏற்ற வகையில் விமானத்தை உயர்த்த முடியவில்லை. இதைப்பற்றி ரஸமான வரலாறு கூட ஒன்று உண்டு.

அது இதுதான்: போட்ட அஸ்திவாரத்திற்கு ஏற்றவாறு விமானம் எழுப்ப வகை அறியாத சிற்பி, திருவாரூர் சிற்பியினிடம் கேட்கச் செல்கிறான். திருவாரூர் சிற்பியோ, அகண்ட கமலாலயத்தை ஒட்டி அதில் ஊறிவரும் தண்ணீரை வடிக்க வழியறியாது, இந்தக் கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பியைத் தேடிவருகிறான். இருவரும் நடுவழியில் ஒரு சத்திரத்தில் சந்திக்கிறார்கள். 'வாளை மலிந்த ஊரில் ஊற்றுக்கண்ணை அடைப்பதா பிரமாதம் ?" என்கிறான் கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பி. 'பஞ்சு பெருத்த இடத்தில் விமானத்தில் கல் ஏற்றுவது என்ன கஷ்டம்' என்கிறான் திருவாரூர் சிற்பி. இருவரும் ஊர் திரும்புகிறார்கள்.

இறைக்கும் நீரிலே வாளை மீன்களை விட, அவை சென்று ஊற்றுக் கண்களில் புகுந்து ஊற்றுக் கண்களை அடைத்துக்கொள்ள நீரை இறைத்து வேலையை முடிக்கிறான் திருவாரூர் சிற்பி. பஞ்சு என்னும் சாரக் கட்டைகளை அடுக்கி அதன்மேல் கற்களை ஏற்றி விமானம் அமைக்கிறான் 'கங்கை கொண்ட சோழபுரத்துச் சிற்பி. எவ்வளவுதான் சாரம் கட்டினாலும் 170 அடிக்குமேல் விமானம் உயரவில்லை. என்றாலும் ஒன்பது நிலைகளோடு உயர்ந்து உயர்ந்து, மேலுள்ள பகுதி சரிந்து சரிந்து உச்சியில் குவிந்து குவிந்து ஒற்றைக் கலசம் தாங்கி நிற்கிறது விமானம். கலசத்தின் உயரம் பன்னிரண்டு அடி. அதற்கேற்றவாறே