பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

265

இப்பனந்தாளில் கோயில் மேற்கு நோக்கி இருக்கிறது. செஞ்சடையப்பராம் இறைவன் மேற்கு நோக்கி இருந்தால் அவருக்கு வட பக்கத்தில் தனிக் கோயிலில் மேற்கு நோக்கி இருக்கிறாள் அம்மையாம் பெரியநாயகி. கோயில் வாயிலில் நீண்டுயர்ந்த கோபுரம் அழகு செய்கிறது. உள்ளே நுழைந்ததும் பதினாறு கால் மண்டபம் இருக்கிறது. அம்மண்டபத்தின் கீழ்ப்புறம் நாககன்னிகை தீர்த்தம் இருக்கிறது. நாகலோக அரசனான வாசுகியின் மகள் சுமதியம்மை இத்தலத்துக்கு வந்து அம்மையை வணங்கித் தவமியற்றி அவள் விரும்பிய அரித்துவசன் என்னும் மன்னனை மணந்து கொண்டாள் என்பது வரலாறு. நாக கன்னிகை வந்து வழிபட்ட இடத்திலே இன்று ஒரு கிணறு இருக்கிறது. அவள் முத்தி பெற்ற தீர்த்தமே நாககன்னி தீர்த்தம். கோயிலின் திருமாளிகைப் பத்திகளை நல்ல மண்டபங்கள் அழகு செய்கின்றன.

திருப்பனந்தாள் தாடகை

இத்திருச் சுற்றின் கீழ்ப் பக்கத்திலே தலவிருட்சமாம் பனைகளும் அதனை அடுத்துத்தாடகை வழிபட்ட