பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/283

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

281

கூத்தன் 'உலகெலாம்' என்று அடி எடுத்துக் கொடுக்க, பெரிய புராணத்தைப் பாடத் துவங்கினார். புராணம் பாடி முடிந்ததும், தில்லையிலேயே அரங்கேற்றம் திகழ்ந்தது. செயற்கரிய செய்த தொண்டர் சீர் பரவிய சேக்கிழாரை, யானை மீது ஏற்றி, அரசனும் உடன் இருந்து கவரி வீசி அவரது பணியின் சிறப்பைப் பாராட்டியிருக்கிறான்.

செறிமத யானைச் சிரத்தில்
பொற்கலத்தோடு எடுத்து, திருமுறையை
இருத்தியபின் சேவையார் காவலரை
முறைமைபெற ஏற்றி, அரசனும் கூடஏறி
முறைமையினால் இணைக்கவரி
துணைக்கரத்தால் வீச
மறை முழங்க, விண்ணவர்கள்
கற்பகப்பூமாரி மழை பொழியத்
திருவீதி வலம் வந்தார்.

என்று உமாபதி சிவாச்சாரியார் பாடி மகிழ்கிறார். இப்படி அமைச்சரது திருத் தொண்டினைப் பாராட்டிய அரசன்தான் அநபாயன் என்னும் குலோத்துங்கன். இவனையே சரித்திர ஆசிரியர் மூன்றாம் குலோத்துங்கன், திரிபுவனதேவன் என்றெல்லாம் அழைக்கிறார்கள், திரிபுவன வீரதேவன் என்று எப்படிப் பெயர் பெற்றான் என்று அறியச் சரித்திர ஏடுகளைப் புரட்டவேணும். இரண்டாம் ராஜராஜனுக்குப் பின் பட்டத்துக்கு வந்து கி.பி. 1178 முதல் நாற்பது வருஷ காலம் அரியணை இருந்து! அரசு செலுத்தி யிருக்கிறான்; இரண்டு முறை பாண்டிய நாட்டில் விக்கிரம பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் நடந்த போரில் இவன் விக்கிரம பாண்டியனுக்குத் துணை நின்று வெற்றியை. அவனுக்குத் தேடித் தந்திருக்கிறான். இரண்டாவது போரில் வீரபாண்டியனுக்குத் துணையாக