பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

29

அழகோடு கூடியவளும், வரப் பிரசித்தி உடையவளுமான அன்னையைத் தரிசித்துவிட்டு மேல் நடக்கலாம். அந்தக் கோயில் பிராகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றித் தெற்குப்பக்கம் வந்தால், பிரசித்தி பெற்ற வட்டப் பாறை இருக்கிறது. இங்குள்ள லிங்கத் திருவுக்கும் வணக்கம் செலுத்திவிட்டு வெளியே வரலாம். தல விருட்சம் வன்னி. அடியிலே மூன்று கவடுகளோடு கிளம்பிப் பெரிய மரமாகவே வளர்ந்திருக்கிறது. இக்கோயிலின் வாயிற்புறத்தில் விஷ்ணு துர்க்கை, சிவதுர்க்கை இருவரும் இருக்கிறார்கள். சங்கு சக்கர தாரியாய் நிற்கும் விஷ்ணு துர்க்கை நல்ல சிலாவடிவம். அருள் பொழியும் அந்தத் திருவுருவத்தைப் பார்த்துக் கொண்டே நின்றால் நேரம் போவதே தெரியாது.

ஆமாத்தூர் விஷ்ணு துர்க்கை

இத்தனையும் பார்த்து விட்டுத் திரும்பும்போது என் உள்ளத்தில் மட்டும் ஒரு குறை. எங்கள் திருநெல்வேலியிலே, எங்கள் தெருவை அடுத்த அனவரததானத் தெருவிலே பிறந்து, எனது பாட்டனாருக்கும் அவர்தம் சிறிய தகப்பனாருக்கும் குரு மூர்த்தியாக விளங்கிய வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் என்னும்