பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வேங்கடம் முதல் குமரி வரை

அண்ணாமலையாரை வலம் வந்து, பின்னர் அவருக்கு இடப்பக்கத்திலே கோயில் கொண்டிருக்கிற உண்ணாமுலையம்மையைத் தரிசிக்கப் போகலாம். மகா மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் நவசக்தி மண்டபம், அங்கு உருவாகியிருக்கும் சக்திகளும், காலசம்ஹாரரும் வீணாதாரரும், இருபதாம் நூற்றாண்டு சிற்பிகளின் கைத்திறன். ஆதலால் அவைகளில் மிக்க கலை அழகை எல்லாம் எதிர்பார்த்தல் இயலாது. கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் அண்ணாமலையாரின் தர்ம பத்தினி உண்ணா முலையம்மை, கம்பீரமான திருஉரு அல்லாவிட்டாலும் அழகும் எழிலும் நிறைந்த உருவம், இந்த அண்ணா மலையார் கோயிலின் பெரும் பகுதி வல்லாள மகாராஜனால் கட்டப்பட்டது என்று கர்ணபரம்பரை கூறும்.

இந்த வல்லாளன் சரித்திர பிரசித்தி பெற்ற வனில்லை என்றாலும் இவனைப்பற்றி, இவனது பக்தியைப் பற்றி ஒரு கதை, ஒரு நாள் அண்ணாமலை அண்ணல் அடியவர் வடிவந்தாங்கி வல்லாள ராஜனிடம் வருகிறார். வந்தவர், 'அன்றிரவு தன்னுடன் தங்க ஒரு பெண் வேண்டும்' என்கிறார். இல்லை என்று சொல்ல அறியாத வல்லாளன் தேவதாசிகளில் ஒருத்தியை அனுப்ப விரைகிறார். அவர்கள் ஒவ்வொருவரும் அன்று பிறர் வயப்பட்டு இருப்பதாகத் தகவல் வருகிறது. மன்னன் இதை அறிந்து மயங்கியபோது, மன்னனின் இளையராணி சல்லமாதேவியே அடியவர்க்குத் தன்னுடலைத்தத்தம் பண்ண முனைகிறாள். ஆனால் பஞ்சணையில் தூங்கிய அடியவரைத் துயில் எழுப்ப அவர் பாதத்தைச் சல்லமை தீண்டலும் அவர் பச்சைப் பசுங் குழவியாகி வருகிறார். அரசன் அரசியரது பிள்ளைக் கலிதீர்க்க வந்த இந்த பிள்ளைப் பெருமான், பின்னர் இடபாரூடராய்க் காட்சி தந்து மறைகிறார். இப்படி வல்லாளன் மகனாக அவதரித்த அண்ணாமலையார் இன்று மாசி மகத்தன்று பள்ளிகொண்டாபட்டுக்கு எழுந்தருளி, வல்லாளனுக்கு வருஷாப்தீகச் சடங்கையெல்லாம்