பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

67

:கூறு உவமைநாடின்
பலா மாவைப் பாதிரியைப்பார்

பலாவும் மாவும் நமக்குத் தெரியும், பாதிரியை நாம் பார்த்ததில்லை. ஆதலால் பாதிரிப்புலியூர் என்று ஒரு தலத்தின் பெயரைக் கேட்டது மே, அங்கு பாதிரியைப் பார்க்கலாமென்று போனேன். அங்குள்ள கோயிலுக்குள்ளும் விரைந்தேன். பாதிரியின் இயல்போடேயே கோயில் இருந்தது. சில கோயில்களில் வெளியில் ஒன்றும் இருக்காது, ஆனால் கோயிலுள் நுழைந்தால் ஒரே கலை மயம். சிறபச் செல்வங்கள் நிறைந்திருக்கும். சில கோயில்களில் உள்ளும் புறமுமே கலைவளம் நிரம்பியிருக்கும். ஆனால் நான் சென்ற பாதிரிப்புலியூர் கோயிலோ, கோபுரம் நன்றாக இருக்கிறது, கோபுரத்துக்கு வடபுறம் குளம் நன்றாக இருக்கிறது. கோயிலின் முன் மண்டபத்தில் குதிரைமீது ஆரோ கணித்து வரும் வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், கோயில் உள்ளே கலையழகு என்பது கொஞ்சம் கூட இல்லை. காரணம் பழைய கோயில் பழுதுற்றிருந்ததைப் புதுப்பித்துத் திருப்பணி செய்ய முனைந்தவர்கள், பழைய கற்களை, பழைய கலை வடிவங்களையெல்லாம் அப்புறப்படுத்தி விட்டு, நன்றாக ஒழுங்கு செய்யப்பட்ட (Well dressed stones) புதிய கற்களை அடுக்கிக் கோயில் கட்டியிருக்கிறார்கள்.

இந்தக் கோயிலில் இறைவனும் இறைவியும் மாத்திரமே பழையவர்கள். மற்றவர்கள் எல்லாம் இருபதாம் நூற்றாண்டின் கைத்திறன். தல விருக்ஷமான பழைய பாதிரி மரமும் பட்டுப் போயிருக்கிறது. என்றாலும் பட்ட மரத்தை தகடு பொதிந்து மொட்டையாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். மற்றவைகளைப் புதுக்கியது போல், புதிய பாதிரி மரம் ஒன்றைத் தேடி எடுத்து நட்டு வளர்த்திருக்கலாம். அதைச் செய்யத் தவறி விட்டார்கள். பழைய பாதிரி மரம் பழைய பெயரின் சின்னமாக விளங்குகிறதே ஒழிய வளரவோ,