பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

வேங்கடம் முதல் குமரி வரை

புசித்தும் இடையூறு செய்து கொண்டிருந்தது ஒரு பூதம் அப்பூதத்தின் வலியடக்க அம்மை மாதவனையே கேட்டுக் கொள்கிறாள். அவரும் பூதத்தைப் பிடித்தடக்கி அதன் மீது ஏறி நிற்கிறார். அதனால் அடங்கவில்லை பூதம் என்று கண்டு, அதன் மீது உட்கார்ந்து பார்க்கிறார். அதனாலும் அடங்காதது கண்டு, பூதத்தின் மீதே நன்றாகக் காலை நீட்டிப் படுத்துக் கொள்கிறார். ஒரு வழியாய் பூதம் திருமாலின் பலம் தாங்காது நசுங்குண்டு நலிகிறது.

இப்படி ஒரு கதை, இக்கதையின் ஞாபகார்த்தமாக இப்பஞ்ச கங்கைக் குளக் கரையிலே உருவாக்கி யிருக்கிறார்கள். இவர்களை முறையே ஊரகம் (உலகளந்த பெருமாள்) பாடகம் (பாண்டவப் பெருமாள்) வெஃகா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள்) கோயில்களிலே காணலாம் காஞ்சியிலே.

இக்கோயில் ஆதியில் பௌத்தர்களுடைய தாரா தேவியின் கோயில் என்றும், பௌத்தர்கள் தமிழ் நாட்டை விட்டு ஓடிய பின், இது காம கோட்டமாக மாற்றப்பட்டது என்றும் கூறுவர். கோயிலுக்குள் மொழு மொழு என்று ஏழடி உயரத்தில் புத்தர் சிலை ஒன்று இருப்பதைக் காட்டி இதற்கு ஆதாரம் தேடுவர். இச்சிலையே சாத்தான் என்றும் சொல்லுவர்.

இது தவிர, இக்கோயிலில் ஆராய்ச்சிக்கு உரிய ஸ்தம்பம் ஒன்றும் உண்டு. காமாக்ஷியம்மையின் சந்நிதிக்குள் நுழையும் வழியில் மேல்தளத்தில் ஒரு ஸ்தம்பம். ஜெயஸ்தம்பம் என்று கோயில் நிர்வாகிகள் கூறுவர். ஸ்தம்பத்தின் மேல் தளத்திலே சாரநாத் சிங்கங்கள் போல் நான்கு பூதகணங்களை உருவாக்கி இருக்கின்றனர்.

சரித்திர ஆராய்ச்சியாளர் சமண சமயத் தூண் என்றும், கி.பி. 15ஆம் நூற்றாண்டிலே நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுவர். காஞ்சியில் ஓடும் வேகவதிக்கு அக்கரையிலே