பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

121

பின்னும் இருபத்து நான்கு படிகள் ஏற வேணும். இந்தப் படிகளை ஏறிக் கடந்த பின்தான் அத்திகிரி வந்து சேர்வோம். அதன் பின்னும் ஆறு படிகள் ஏறிக் கடந்தால், அத்திகிரி அருளாளனைக் கண்டு தரிசிப்போம்.

ஆஜானுபாகுவாக நீண்டுயர்ந்து தங்கக் கிரீடமும் தங்கக்

வைகுண்ட பெருமாள் கோயில்

கவசமும் தரித்துக் கம்பீரமாக நிற்கிறார் அவர். இந்த அழகு வாய்ந்த வரதர் அருள் கொழிக்கும் திருமுக விலாசம் உடையவர். இவரைக் கண்டு தானே 'ஐயுறவும், ஆரிருளும் அல்வழியும் வைகுண்ட பெருமாள் கோயில் அடைந்தவர்க்கு மெய்யருள் செய்திடும் திருமால் வேழமலை மேயவனே' என்று மெய்யுருகி நின்றிருக்கிறார் வேதாந்த தேசிகர்.

அவரது முகத்தில் நிறைய வடுக்கள் இருக்கின்றன. அவையெல்லாம் போரில் ஏற்பட்ட காயங்கள் என்பார்கள். மூர்த்தி சற்றுப் பின் சாய்ந்து மிடுக்காகவே இருக்கிறார். இவரைப் பல கோலங்களில் அலங்காரம் பண்ணிப் பார்க்க விரும்புபவர்கள் உத்சவ காலங்களிலே இங்கு செல்ல வேணும்.

முகம்மதியப் படையெடுப்பின் காரணமாக, இவ்வரதர் 1690இல் ஆலயத்தினின்றும் எடுத்துச் செல்லப்பட்டு, உடையார் பாளையத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார் என்றும், மறுபடியும் 1710இல் தோடர்மால் என்பவர்