பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

வேங்கடம் முதல் குமரி வரை

மூலம் திரும்பவும் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டார் என்றும் அறிகிறோம். இதை ஞாபகப் படுத்தும் விழா ஒன்று இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.

அத்திகிரி அருளாளனை வணங்கியபின், கச்சி வழித்தான் மண்டபம் வழியாக வந்து, மலையை விட்டு இறங்கி வெளியே வரலாம். கோயிலை விட்டு வெளியே வருமுன், திரு முற்றத்தில் உள்ள நாலு கால் மண்டபத்துக்கு வடக்கே இருக்கும் அனந்த புஷ்கரணியையும், அதனை அடுத்து நூற்றுக் கால் மண்டபத்தையும் பார்த்து விடலாம்.

குதிரையையும் யாளியையும் அவற்றின் மீது ஏறிச் சவாரி செய்யும் வீரர்களையும் உடைய கற்றுண்கள் நிறைந்தது. இம் மண்டபம். மன்மதன், ரதி முதலிய சிற்ப வடிவங்களையும் கல் சங்கிலி முதலிய திறன்மிகு வேலைகளையும் அங்கு கண்டு களிக்கலாம். இவை வேலூர் விரிஞ்சிபுரம் முதலிய தலங்களில் உள்ள நாயக்கர் காலத்துச் சிற்ப வடிவங்களோடு ஒப்பிடத்தகுந்தவை அல்ல. காலத்தில் பிற்பட்டதோடு, கலை அழகிலும் பிற்பட்டனவாகத்தான் தெரிகின்றன.

நூற்றுக்கால் மண்டபத்துக்கு வடக்கே அனந்த புஷ்கரணி. அனந்தனான ஆதிசேஷன் இருந்து தவம் செய்த இடம். இந்த அனந்த சரஸின் நடுவிலே ஒரு நீராழி மண்டபம். அந்த மண்டபத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு மாடத்தில் அத்திவரதர் இருக்கிறார். அத்திவரதர் என்றால் அத்திமரத்திலே உருவானவர்தான். அவர் அந்தத் தண்ணீருக்குள்ளேயே முழுகிச் சயனத் திருக் கோலத்திலேயே இருக்கிறார். நாற்பது வருஷங்களுக்கு ஒரு முறையே குளத்தில் உள்ள நீரையெல்லாம் இறைத்து அவரை வெளியே கொணர்கிறார்கள். ஒரு மண்டல காலம் பூசை புனஸ்காரம் எல்லாம் நடக்கும். அதன் பின் திரும்பவும் யதாஸ்தானத்துக்கே. ஆம், தண்ணீருக் குள்ளேயே முழுகி விடுவார். ஆழ்ந்ததூக்கத்திலும் அமிழ்ந்து