பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

127

செய்த கலைஞனின் கற்பனையை எண்ணி எண்ணி வியக்கிறோம்.

இப்படி இருபதாம் நூற்றாண்டிலே, கலைஞன் ஒரு காவிரித் தாயை உருவாக்கினால், இதற்கு எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே ஒரு கங்காதரரை உருவாக்கி இருக்கிறான் ஒரு சிற்பி, தக்கோலத்திலே.

பாலாற்றின் கரையிலோ எங்கு பார்த்தாலும் நல்ல நீரூற்றுகள், பால் ஆறு இன்று வற்றிக் கிடப்பதைப் பார்த்து ஒரு நண்பர் சொன்னார்: 'இது பாழ் ஆறு, தெரியாமல் பால் ஆறு என்று சொல்லிவிட்டார்கள்!' என்று. ஆனால் உண்மையில் இது நல்ல பால் ஆறுதான். பசுவின் மடியிலே உள்ள பாலைக் கன்றுக்குட்டி முட்டிக் குடித்தால்தானே பால் சுரக்கும். அது போல் தன் மடியையும் கரையையும் அகழ்ந்து தோண்டுவாருக்கெல்லாம் வற்றாது பால் போல் தண்ணீர் சொரியும் இயல்புடையது பாலாறு.

இந்தப் பாலாற்றின் இருபுறமும் பத்துப் பதினைந்து மைல் வரை மணற்பாங்கான இடத்திலெல்லாம், பதினைந்து இருபது அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் கிடைக்கும், கிணறுகள் தோண்டினால். காஞ்சிக்கு வடக்கே ஏழெட்டு மைல் தூரத்தில் உள்ள புள்வேளுரிலே (பள்ளுர் என்று இன்று அழைக்கப்படுகிறது) ஏழு கிணறு என்ற பெயரோடு ஒரு கிணறு. ஔவை புள்வேளுர் பூதனிட்ட வரகரசிச் சோற்றை உண்ட மகிழ்ச்சியில் பாடியபோது, இதில் நீர் சுரந்தது என்பது கதை. இக் கிணற்றில் தண்ணீர் என்றும் நிறைந்திருப்பது இன்றும் கண்கூடு.

இந்த ஊருக்கு வடகிழக்கே ஆறு ஏழு மைல் துரத்தில் இருப்பது தக்கோலம். இந்த ஊரிலே ஒர் அதிசயம். ஊருக்கு வடகீழ் மூலையில் ஒரு சிறிய கோயில். அங்குக் கோயில் கொண்டிருப்பவர் கங்காதரர். அந்தக் கங்காதரரைச் சுற்றிப்