பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15. ஆலங்காட்டு அடிகள்

சென்னை பூக்கடை பஜாரில் ஒரு கடை. கண்ணாடிச் சாமான்களின் விற்பனை அங்கே. ஆதலால் பெரிய நிலைக் கண்ணாடிகள், சிறிய கண்ணாடிகள், பீங்கானில் வண்ண வண்ணக் கோப்பைகள், பாத்திரங்கள், எலெக்டிரிக் லைட்டுகளில் எத்தனையோ ஷேடுகள், குளோப்புகள், சர லாந்தல்களே அக் கடையில் நிறைந்திருக்கின்றன. இவையெல்லாம் நூறு அடி நீளமும் நாற்பது அடி அகலமும் உள்ள கடையில் அடுக்கியும் தொங்கவிடப் பட்டும் இருக்கின்றன.

இந்தக் கடைக்குள் நுழைகிறேன் நான், ஏதோ கண்ணாடி ஒன்று வாங்க. எனக்கோ ஒரே பயம், கையை வீசி நடந்தால், எங்கே கை பட்டுக் கண்ணாடிகள் கீழே விழுந்து உடைந்து விடுமோ என்று. ஆதலால் மிக்க கவனமாக, அடக்கமாக அடி மேல் அடி எடுத்து வைத்தே நடக்கிறேன்.

இந்தச் சமயத்தில் ஒரு சிலம்ப வீச்சுக்காரன் அங்கு வருகிறான். அவனுடன் அவன் சகாக்களும் மற்றவர்களும் வருகிறார்கள். அவன் கையிலே இரண்டு கம்புகள். கடைக்காரர் அனுமதி இல்லாமலேயே, சிலம்பக் கம்புகளைச் சுழற்றிச் சிலம்ப வித்தைகள் காட்ட ஆரம்பித்து விடுகிறான், கண்ணாடிக் கடைக்குள்ளே. நெடுக்கும் குறுக்குமாக ஓடி, மேலும் கீழுமாகக்கம்பைச் சுழற்றுகிறபோது, கடைக்காரருக்கு ஒரே கவலை. இது என்ன? தப்பித் தவறிக் கம்பு ஒரு கண்ணாடிச் சாமான் மீது பட்டால் போதுமே, அடுக்கி வைத்திருக்கும் சாமான்கள் அத்தனையும் பொலபொல வென்று விழுந்து உடைந்து தவிடு பொடியாகிவிடுமே என்று.

ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஒரு சிறு கண்ணாடிச் சாமானுக்கும் சேதம் ஏற்படவில்லை, இந்தச்