பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

137

அடி பேரில் பாதாளம் பேரும், அடிகள்
முடிபேரில் மாமுகடு பேரும் - தொடிகள்
மறிந்தாடும் கைபேரில் வான் திசைகள் பேரும்
அறிந்து ஆடும் ஆறுஎன் அரங்கு?

'இப்படிப் பாதாளம் மாமுகடு வான் திசைகள் எதுவும் பெயராமே, நீ அரங்கத்தில் அறிந்து ஆடக் கற்றிருக்கிறாயே, அது எப்படிச் சாத்தியமாகிறது?' என்றே கேட்கிறார், அம்மையார்.

இப்படி இறைவன் ஆடும் அற்புத தடனத்தையும், இந்த ஆட்டத்தைக் கண்டு அதிசயித்து நிற்கும் காரைக்கால் அம்மையாரையும் காண வேண்டும் என்றால், நேரே நாம் திருவாலங்காடு செல்ல வேண்டும். அங்குள்ள தேவர் சிங்கப் பெருமாளாம் ஆலங்காட்டு அடிகள் கோயிலுக்குள் நுழைய வேண்டும். அப்படி நுழைந்தால், அங்குள்ள ரத்ன சபையிலே ஊர்த்துவ நடனம் ஆடிக் கொண்டிருக்கும் இறைவனையும் அங்கே பேயுருவில் அமைந் திருக்கும் காரைக்கால் அம்மையையுமே காணலாம்.

தாளொன்றால் பாதாளம் ஊடுருவி, மற்றைத் தாளொன்றால் அண்டங் கடந்து உருவி நிற்கும் அந்த ஊர்த்துவ தாண்டவம் இறைவன் ஆடுவதற்கு நேர்ந்த காரணம் தெரிய வேண்டாமா? இந்த ஆலங்காடு பெயருக்கேற்ப