பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

வேங்கடம் முதல் குமரி வரை

நல்ல காடாகவே இருந்திருக்கிறது. காட்டிடையே கோயில் கொண்டிருக்கிறாள் காளி. அவளது ஆதிக்கம் அங்கு குறைவின்றி நடந்திருக்கிறது. உலகம் முழுவதையுமே முடிவு செய்தல் கூடும் என்று அகங்கரிக்கிறாள் அவள். இத்தோடு அவள் ஆடவும் வல்லவள். அதனால் இறு மாப்புவேறே.

இந்த நிலையில், தேவர்கள் இவள் தன் கர்வத்தை அடக்க இறைவனை வேண்டுகின்றனர். இறைவனுமே ஆலங்காட்டுக்கு வருகிறான். ஆடல் போட்டிக்கு அன்னை காளியையே அழைக்கிறான். அவளும் இசைகிறாள்.

போட்டி நடனம் நடக்கிறது (இன்றைய வெள்ளித் திரையிலே இந்த நடனப்போட்டிகள் தாம்சர்வசாதாரணமாயிற்றே. ஆனால் ஒரேயொரு வித்தியாசம். அன்று நடப்பதற்கும் இன்று நடப்பதற்கும். இன்று போட்டி இடுபவர்கள் இருவரும் அநேகமாய்ப் பெண்களாகவே இருப்பர். அன்று போட்டியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஆண் மற்றவர் பெண் என்பதையும் கொஞ்சம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்). இறைவன் ஆடும் ஒவ்வொரு நடனத்தையும் காளியும் சளைக்காது ஆடுகிறாள். ஆட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. போட்டியும் மும்முரமாகிக் கொண்டே வருகிறது. வெற்றி கிட்டக் காணோம் இறைவனுக்கு.

இந்தநிலையில் இறைவன் வலது காதிலே உள்ள குழைநழுவி விழுகிறது, கீழே. இதற்காக நடனத்தை நிறுத்தாமல், அப்படியே அந்தக் குழையைத் தனது கால் விரலால் எடுத்து, அக்காலை அப்படியே அநாயாசமாக உயர்த்தி, லாவகமாகக்குழையை வலது காதிலே பொருத்திவிடுகிறார்.

ஒரு காலை ஊன்றி, ஒரு காலை வான் நோக்கி உயர்த்துவது பெண்ணால் ஆகிற காரியமா என்ன? முடியாது வெட்கித் தலை குனிகிறாள் காளி, தோல்வியை ஒப்புக்கொள்கிறாள். இறைவன் வெற்றிக் கொடி நாட்டுகிறார். (அன்பர்கள் கேட்கலாம், பாலே நடனத்தில் பெண்கள் இதையெல்லாம் செய்கிறார்களே என்று.