பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

143

சொல்கின்றனர். வணிகன் அதற்கு மறுக்க, அவர்கள் அவனுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால், அவர்கள் எல்லோரும் தீ மூழ்குவதாகச் சத்தியம் செய்கின்றனர். பேயுடன் தங்கிய வணிகனின் உயிர் குடித்துப் பேய் மறைந்து விடுகிறது. சொன்ன சொல்லைக் காப்பாற்றி, வேளாளர் எழுபதின்மரும் தீக்குளிக்கின்றனர்.

மாறுகொள் பழையனூர் நீலிசெய்த வஞ்சனையால்
வெணிகர் உயிர் இழப்பத் தாங்கள்
கூறிய சொல் பிழையாது துணிந்து செந்திக்
குழியில் எழுபது பேரும் முழுகிய

கதையைத் தொண்டை மண்டல சதகமும், உமாபதி சிவாச்சாரியார் சேக்கிழார் புராணமும் வியந்து கூறுகிறது.

சத்தியத்துக்கு உயிர் கொடுத்தவர் வேளாளர் என்றாலும், கோயில் எடுப்பித்திருப்பது பழையனூர் நீலிக்கே. ஆம். 'வஞ்சப்படுத்தொருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு' நாம் அஞ்சுவது, பழையனூர் நீலியைக் கண்டுதானே.

அப்படி அஞ்சும் போதெல்லாம், 'அள்ளளம்பழனைமேய. ஆலங்காட்டு அடிகளை' நினைத்தால், அவர் வினைகளை யெல்லாம் கரி சலுத்திடுவர் என்பர் அப்பர். ஆம் அவருடன் சேர்ந்து ஆலங்காட்டு அடிகளை நினைந்து, நாமும் நம் வினைகளைக் களையலாம் அல்லவா?