பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

வேங்கடம் முதல் குமரி வரை

நந்தி மண்டபம்

மண்டபத்துக்கு வெளியே ஒரு சிறிய மண்டபத்தில் இருக்கும் நந்தியோ (திருவலத்தில் இருந்தது போல்) இறைவனுக்குப் பின்புறத்தைக் காட்டிக் கொண்டு, கிழக்கு நோக்கியே இருக்கிறது, தொண்டைமான் சக்கரவர்த்திக்குத் துணைபோன அவசரத்தில்.

கோயிலுக்குச் சென்றால் கர்ப்ப கிருகத்துக்கு வெளியே இருக்கின்றன, இரண்டு எருக்கந் தூண்கள். தேக்கு மரத்தை விட வலிவுடைய

பல்லவ சிங்கத் தூண்கள்

தூண்கள் அவை. பித்தளைப் பூண்கள் வேறே கட்டி வழு வழு என்று இருக்கின்றன. இறைவனோ தீண்டாத திருமேனி தாங்கியவராக இருக்கிறார். அவருக்குச் சந்தனம் காப்பிடுகிறார்கள். இவரையே வெட்டு தாங்கி ஈசுவரர் என்றும் அழைக் கிறார்கள். தொண்டை மான் சக்கரவர்த்தி வெட்டிய வெட்டினால்