பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

15

தானின்ற ஊமை எனக்கென்று கேட்க
தருவன் வரம்
வான் நின்ற சோலை வடமலைமேல் நின்ற
மாதவனே.

‘இத்தனையும் இப்படியே நடந்ததா? அதற்கு ஆதார பூர்வமான சான்று உண்டா?' என்று ஆராய வேண்டுவதில்லை. பத்தனாகிய கவிஞன் பாடிப் பல நூறாண்டுகள் கழிந்து விட்டன. என்றாலும், மக்கள் உள்ளத்திலே, அதே அசையாத நம்பிக்கை இன்னும் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது என்பது கண்கூடு.

இன்றும் நாள் நக்ஷத்திரம் என்று ஒன்றும் பார்க்காமலேயே தினசரி நூற்றுக் கணக்கான மக்கள் நடந்தோ அல்லது காரிலோ

கோபுர வாயில்

பஸ்ஸிலோ சவாரி பண்ணியோ திருமலை சென்று சேர்கிறார்கள். பணம் படைத்தவர்கள் எல்லாம் நிறையக் கட்டணம் செலுத்தி மலை மேல் நிற்கும் மாதவனைச் சேவிக்கிறார்கள்.

ஏழைகளும் 'கியூ' வரிசையிலே, மணிக் கணக்காக நின்று, நகர்ந்து, கர்ப்பகிருஹத்தில் நுழைந்து வேங்கடேசுவரனைத் தரிசிக்கிறார்கள். இத்துடன் அவரவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டபடி பணமாக, நோட்டாக,