பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20. கடல் மயிலைக் கபாலி

நான் சிறு பையனாகப் படித்துக் கொண்டிருந்தபோது, மாஜிக் என்றால் எனக்கு நிரம்பப் பிடிக்கும். சர்க்கஸ் விளையாட்டுகளிலும் மோகம் உண்டு. அதில் எல்லாம் ஏதோ சில அபூர்வமான பார் விளையாட்டுகளும் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆகாயத்திலேயே அந்தர் அடிப்பதும் தானே,

காட்டு மிருகங்களான சிங்கம் புலிகளை யெல்லாம் பிடித்து, அவைகளின் பற்களையெல்லாம் பிடுங்கி, அவைகளைப் பட்டினி போட்டு வைத்திருப்பார்கள், அவைகளைக் கூண்டிற்குள் வைத்துச் சில விளையாட்டுகளும் காட்டுவார்கள். அபூர்வமான விளையாட்டுகளாகவே இருக்கும். ஆனால் அதிசயப்படுவதற்கு என்ன இருக்கிறது, சர்க்கஸில்?

ஆனால் மாஜிக் என்னும் கண் கட்டி வித்தையில் என்ன அற்புதமான வேலைகள்! கண் மூடிக் கண் திறப்பதற்குள் என்ன என்ன ஜாலங்கள்! கண்ணைத்தான் மூடுவானேன்? விழித்த கண் விழித்தபடியே பார்த்துக் கொண்டிருக்கும் போதே, நாம் நடக்க முடியாது என்று நினைத்துக் கொண்டிருப்பதை அல்லவா நடத்திக் காட்டுவார்கள் இந்த மந்திரவாதிகள்.

கூட்டத்தில் முன் வரிசையில் இருப்பவரிடம் பத்திரமாய் வைத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுத்த தங்க மோதிரத்தைக் கூட்டத்தின் கடைசியில் இருப்பவர் ஒருவர் ஜேபியில் இருந்து எடுத்துக் காட்டுவார்கள். காலியான பெட்டி ஒன்றிலிருந்து விதம் விதமான பூக்கள் சுவையான பழங்கள் எல்லாம் தருவிப்பார்கள் காசு ஒன்றும் கொடாமலேயே. இது எல்லாம் நாகரிக மந்திரவாதியின் வேலை.

ஆனால் அந்தப் பழைய கழைக் கூத்தாடியின் வேலையோ, இவற்றை யெல்லாம் தூக்கி அடிக்கும். கூட்டம் கூடியிருக்கும்