பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நாட்டில் அப்படி அவர் தங்கிய இடங்களில் சிறந்தவை இரண்டு. ஒன்று, சிதம்பரத்துக்குப்பக்கத்தில் உள்ள திருக்கழிப்பாலை. இன்று அங்குக் கோயில் இல்லை.

தியாகராஜர் சந்நிதி

கொல்லிட நதி கொண்டு போய் விட்டதாம். ஆனால் மற்றொரு கோயில் நன்கு நிலை பெற்றிருக்கிறது. அதுதான் திருவான்மியூர். திருவான்மியூரில் உள்ள பால்வண்ண நாதர் கோயிலில் உள்ள மூர்த்தியை மருந்தீசர், அமிர்தேசுவரர் என்று அழைத்தாலும், ஊர் மட்டும் வான்மீகர் பேராலேயே. வான்மியூர் என்று நிலைத்திருக்கிறது.

வான்மீகர் இத்தலத்துக்கு வந்ததே ஒரு ரஸமான வரலாறு. வான்மீகருக்குத் தாம் ஆயிர வருஷ காலம் தவம் பண்ணினோம் என்றும், அது காரணமாகவே ராமாயணம் பாட முடிந்தது என்றும், ராமாயணம் பாடியதனாலேயே அமரத்துவம் பெற்று விட்டோம் என்றும் ஒரு கர்வம்.

இந்த எண்ணத்தோடு வாழும் முனிவரை என்றும் சிரஞ்சீவியாக இருக்கும் மார்க்கண்டேயர் வந்து காண்கிறார் ஒரு நாள், அவரோ அமிர்தகடேசுவரராம் சிவனை வணங்கி, என்றும் அமரனாக இருக்க வரம் பெற்றவர். வான்மீகரைப் பார்த்து, 'அமரத்துவம் பெற ஆயிரம் வருஷம் தவம் செய்ய வேண்டுமா? ஒரு பெரிய காவியமே பாட வேண்டுமா?