பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

வேங்கடம் முதல் குமரி வரை

கடலில் உள்ள பரந்தர்மர் திருவடியில் சேர்க்க அவரது உள்ளுணர்வு கூறியது.

பாற்கடல் செல்வதற்கு முன், இடையே உள்ள கருங்கடலைக் கடக்க வேண்டியிருக்கிறது. இதனை எப்படிக் கடப்பது? அதற்காக அக்கடற்கரையிலே ஒரு கொண்டம் கட்டுகிறார். - அந்தக் கொண்டத்துக்கு அப்புறம் கடல் தண்ணீரை யெல்லாம் இறைத்துக் கொட்டிக் கடலை வற்ற அடித்து விட்டால், பாற்கடல் செல்வது எளிதாக இருக்குமே என நினைக்கிறார்.

இது முடிகிற காரியமா என்றுகூட எண்ணவில்லை. வேலையைத் துவக்கி விடுகிறார். மலர் வாடுவதற்குள் கடல் நீரை வற்ற வைக்க வேண்டுமே என்று துரிதமாகவே வேலை நடக்கிறது. இவர் எடுத்துக் கொள்ளும் சிரமத்தைக் கண்டு, பரந்தாமனே ஒரு வயோதிகர் உருவில் வந்து, 'நானும் உமக்குத் துணை செய்யட்டுமா?' என்கிறார். அதற்குக் கூலியாகக் கொஞ்சம் உணவும் தண்ணீரும் கேட்கிறார். புண்டரீகர் அதற்கு ஒத்துக் கொண்டு, அவருக்கு உணவு கொண்டு வர, ஊருக்குள் செல்கிறார். திரும்பி வந்து பார்த்தால், வயோதிகர் சங்கு சக்ரதாரியாய்ப் புண்டரீகர் கட்டிய கொண்டத்திலேயே படுத்துக் கொண்டி ருக்கிறார். கடல் நீர் வற்றியிருக்கிறது. பாற்கடலுக்கு வழி நேரே திறந்திருக்கிறது.

புண்டரீகரை வழிமறித்துத்