பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

209

டைரக்டர் திரு. டி. என். ராமச்சந்திரன் பேச்சை ஒரு தரம் கேட்டு விட்டால், அவர் காது கேட்க, இதைப் பகீரதன் தவம் என்று சொல்லத்துணியமாட்டோம்).

இந்தச் சிற்ப சித்திரம் கல்லிலே சமைத்த ஒரு கவிதை. எத்தனையோ விதமான வடிவங்கள்- பூனை முதல் யானைவரை, தேவர் முதல் தவசிவரை. அர்ச்சுனன் தாடி சடையுடன் தவம் செய்யும் கோலமும், அங்குச் சிவ பெருமான் எழுந்தருளிப் பாசுபதம் அளிக்கும் காட்சியும் தத்ரூபம்.

இடையே ஒரு கார்ட்டூன் சித்திரமும் கூட. உண்மைத் தவசிகளிடையே ஒரு போலித் தவசி போல ருத்திராக்ஷப் பூனை தவம் செய்யும் காட்சி ஒன்றும் செதுக்கப்பட்டிருக்கிறது. தவம் செய்யும் பூனையைச்சுற்றி எலிகள் அடிக்கும் கும்மாளம் எல்லாமே விவரிக்கப் பட்டிருக்கிறது, அங்கே, இன்னும் என்ன என்ன இல்லை என்பது எளிது. அங்கு 'இல்லாதன இல்லை!' என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்தானே,

இன்னும் சற்று மேற்கே நகர்ந்தால், பேன் பார்க்கும் குரங்குகள், கண்ணன் வெண்ணெய் உண்ணல் என்றெல்லாம் காட்சிகள். பின்னால் தெற்கே திரும்பி, மேட்டில் ஏறினால், அடுக்கடுக்காய் மண்டபங்கள். லஷ்மி மண்டபம், வராக மண்டபம்,

வே-கு :14