பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

215

இல்லை. உண்ண உணவுக்குத் திருக்கழுக்குன்றம் வருவது நிதரிசனம். தினசரி நிகழ்ச்சி.

இது விஷயம் என்னவென்று அறியத் தல வரலாற்றைப் புரட்ட வேண்டும். ஏதோ பிரம்ம புத்திரர்கள் எட்டுப் பேர் சாரூப பதவி வேண்டிக் கடுந்தவம் புரிந்து, பின்னர் சிவபெருமான் காட்சியளித்தபோது, மறந்து போய்ச் சாயுச்சிய பதவி கேட்டு விட்டதாகவும், அதற்காகவே அந்த எட்டுத் தவசிகளையும் யுகத்துக்கு இரண்டிரண்டு பேராய்க் கழுகுகளாகப் பிறந்து வாழ இறை அருள் செய்திருக்கிறார் என்றும் சொல்கிறது புராணம்.

அவர்களே முந்திய யுகங்களிலே சண்டன் பிரசண்டன் எனவும், சம்பாதி சடாயு எனவும், சம்புகுந்தன் மாகுத்தன் எனவும் பிறந்து முக்தி எய்தியிருக்கிறார்கள். அவர்களில் இருவரே இந்தக் கலியுகத் திலே பூஷா விதாதா என்னும் இரண்டு கழுகுகளாகப் பிறந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று அறிவோம். கலியுகம் முழுவதும் இருப்பது இதே இரண்டு கழுகுகள்தானா - இல்லை , அவற்றின் பரம்பரையா என்று, முன்னிருந்து கண்டவர்களும் இல்லை. இனி இருந்து காணப் போகிறவர்களும் இல்லை. ஒன்று மட்டும் உண்மை.

இரண்டு கழுகுகள், இத்தனை வருஷங்களாக, இதே இடத்துக்கு இதே